ஓரம்கட்டப்பட்ட விஜயகாந்த்! இனி பிரேமலதாதான் எல்லாம்! மொத்தமாக தேமுதிகவை ஒதுக்க திமுக, அதிமுக முடிவு?
சென்னை: தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம்.. அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. இதில் தேமுதிக இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது.

தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. அதன்பின் அமமுகவுடனும் தேமுதிக கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து தேமுதிக எந்த பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தது. பெரிதாக அரசியல் லைம்லைட்டிலும் தேமுதிக இல்லை.
விஜயகாந்த் வருகை: இந்த நிலையில்தான் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில்.. பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் ஆகி உள்ளார்.
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பிரேமலதாவை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரேமலதா கையை தூக்கி விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
கூட்டணி: தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம்.. அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் பிரேமலதாதான் இனிமேல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பார். ஆனால் அவர் பொதுவாக இறங்கி போகும் இயல்பு கொண்டவர் இல்லை. அதிக இடங்களை கேட்பார். அந்த இடங்களை கொடுக்கும் வரை வாதம் செய்வார். அரசியலில் கட்சிகள் இறங்கி செல்லும் . ஆனால் பிரேமலதா அப்படி இறங்கி செல்லும் வழக்கம் கொண்டவர் கிடையாது.
அவர் கேட்ட இடங்களில் விடாப்பிடியாக இருப்பார். அதனால் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதே கடினம் என்ற நிலை அதிமுக , திமுகவிற்கு இருக்கும். ஏற்கனவே பிரேமலதா உடன் பேச்சுவார்த்தையில் எடப்பாடிக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் துரைமுருகனுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. இதனால் திமுக, அதிமுக இரண்டும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதை பெரிதும் விரும்பாது.
கூட்டணி விருப்பம்; அதோடு தேமுதிக வாக்கு வங்கியும் கடந்த தேர்தல்களில் 5 சதவிகிதம் என்பதில் இருந்து குறைந்து 1 சதவிகிதம் வரை வந்துள்ளது. தேமுதிகவின் முகமே விஜயகாந்த்தான் . அவரே கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுவிட்டார். அப்படி இருக்க.. அவர் இல்லாமல் தேமுதிக எப்படி இடங்களை வெல்ல முடியும், பிரச்சாரம் செய்ய முடியும்.
அதனால் இனி தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications