மகளிர் உரிமை தொகை.. சட்டென வாட்ஸ் ஆப்பில் வந்த போட்டோ.. குழம்பிய பெண்கள்! இதுதான் அதுவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம் என்று கூறி ஒரு வலைதளங்களில் பகிரப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு விளக்கம் அளித்து உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம். அதற்கான அப்ளிகேஷன் இதுதான் என்று பொய்யான ஒரு அப்ளிகேஷன் இணையத்தில் உலா வருகிறது. பல வாட்ஸ் ஆப் குழுக்களில் இந்த அப்ளிகேஷன்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

குழப்பம்: இது பெண்களுக்கு இடையே கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. . இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு விளக்கம் அளித்து உள்ளது.


அதில், இதுபோன்று எந்த விண்ணப்பத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்து 30 நாட்களுக்குள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன சிக்கல்: மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை. பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படாது.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த 4 மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


திட்ட விரிவாக்கம்; இரண்டு நாட்களுக்கு முன் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது .

கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர், மகளிர் உரிமைத்தொகை பெற்றனர்; தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது.

மேலும் விரிவாக்கம்: இதை மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிடம் விசாரித்த போது, இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+