சவுக்கு சங்கரை தீவிரவாதி போல கைது செய்யும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது?- நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை: “கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒரு ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக்கிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரில், சவுக்கு சங்கர் அவதூறாக பேசி தன்னை மிரட்டி, 2 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக குற்றம்சாட்டினார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சவுக்கு சங்கரை அவரது வீட்டில் இருந்தபோது கைது செய்தனர்.
கைது நடவடிக்கையில், போலீசார் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று சவுக்கு சங்கரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல்துறையின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பாசிச திமுக அரசு. கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் ஒழுங்கைச் சீரழித்து வரும் சமூக விரோதிகளும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக உலவி வரும் வேளையில், ஒரு ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?
ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களைக் கைது செய்து முடக்குவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் திமுக அரசு தனது பாசிசப் போக்காலேயே வீழும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications