திமுகவிற்குதான் ஆதரவா முடியும்.. ஆக்சன் எடுக்காத பாஜக.. ஓ இதுதான் சங்கதியா? சீக்ரெட்டை சொன்ன புள்ளி!
வேளாண் சட்டத்துடன் நீட்டை ஒப்பிட முடியாது என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்து உள்ளார்.
சென்னை: நீட் தேர்வை தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை, வேறு எந்த மாநிலத்திலும் இது பிரச்சனையாக உருவாக்கவில்லையே ஏன்? என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.
அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது.
இந்த நிலையில் நீட் தேர்வு தடை செய்யப்படுமா இல்லையா என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், நீட் தேர்வை தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. தமிழ்நாடு அரசு சார்பாக இதற்கு எதிராக கடிதம் அனுப்பப்பட்டது. 12 மாநிலங்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கடிதத்திற்கு வேறு எந்த மாநிலமும் பதில் அளிக்கவில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இது பிரச்சனையாக உருவாக்கவில்லையே ஏன்? தமிழ்நாட்டில் முன்பு நிலைமை வேறு மாதிரி இருந்தது. உதாரணமாக நம்முடைய சிலபஸ் வேறு மாதிரி இருந்தது. இதனால் அவர்கள் சிபிஎஸ்இ, என்சிஆர்டி மாணவர்களை எதிர்கொள்வதில் சிக்கல் இருந்தது.

நீட்
இதனால் 5 வருடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தேன். நாம் சிலபஸ் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை அதிமுகவும் செய்வதாக இருந்தது. ஆனால் திமுக இதில் குறுக்கிட்டு தமிழ் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள், பிரச்சனை செய்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் அதிமுக பின்வாங்கியது. இல்லையென்றால் 5 ஆண்டுகளுக்கு விலக்கு வாங்கி இருக்கலாம். அதை தடுத்தது திமுகதான்.

சிலபஸ்
நீதிமன்றமே விலக்கு வாங்கி கொடுத்து இருக்கும். ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்தது அப்போதைய எதிர்க்கட்சிகள்தான். அப்போதைய எதிர்க்கட்சிகளின் திமுகதான் இதை தடுத்தது. தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறதே என்கிறார்கள். அதோடு இதை ஒப்பிட முடியாது. அது வேறு காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது. அப்படியே சாப்பிட்டாலும் அந்த வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கும் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை ஒப்பிட்டு பார்க்க முடியாது. 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்காக கூடுதல் இடங்களை ஒதுக்கினார்கள்.

வேளாண் சட்டம்
வேளாண் சட்டத்துடன் இதை ஒப்பிட முடியாது. அவர்கள் வாக்கு போய்விடும் என்பதற்காக இப்படி செய்தனர். அந்த சட்டத்தை அந்த ஒரே காரணத்திற்காக வாபஸ் வாங்கினார்கள். வாக்கு போய்விடும் என்று செய்தனர். ஆனால் நீட்டை இங்கே விலக்கினால் அது திமுகவின் வெற்றியாக கருதப்படும். திமுக தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்லும். பாஜகவிற்கு இருக்கிற வாக்குகளும் போய்விடும். அதனால் அதை பாஜக செய்ய வாய்ப்பே இல்லை. திமுகவிற்கு சாதகமாக மாற கூடிய விஷயம் ஒன்றை ஏன் பாஜக செய்ய வேண்டும், என்று சுமந்த் சி ராமன் குறிப்பிட்டு உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications