ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாது.. எச்சரித்த ஓபிஎஸ்! கை விரித்த "பேங்க்".. காரியத்தை சாதித்த எடப்பாடி!
சென்னை: அதிமுக வங்கி கணக்குகள் எல்லாம் ஓ பன்னீர்செல்வம் கையைவிட்டு போய் இருக்கிறது. இதனால் அவர் தற்போது கட்சி நிதியை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து ஓ பன்னீர்ச்செல்வம் நீக்கப்பட்டார். இவரை நீக்குவதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட 16 தீர்மானங்கள், மற்ற முடிவுகள், நியமனங்களுக்கு எதிராக ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

முறையீடு
இது தொடர்பான விசாரணைகள் இன்னும் தேர்தல் ஆணையத்தில் தொடங்கவில்லை. விரைவில் தேர்தல் ஆணையம் இதில் முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்புகள்
அதிமுக துணைப்பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதிமுகவின் தலைமை கழக செயலாளராக வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்படி கட்சியின் முக்கிய பொறுப்புகள் எல்லாம் புதிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

பொருளாளர்
இதில் பொருளாளர் பொறுப்பு என்பது முக்கியமானது ஆகும். ஏற்கனவே அதிமுகவில் நிலவும் மோதல் காரணமாக கட்சியில் சம்பளம் பெறும் நிர்வாகிகளுக்கு வருமானம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொருளாளராக ஓ பன்னீர்செல்வம் இருந்த கடைசி மாதத்தில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், தற்போது பொருளாளர் பொறுப்பில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்டார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் தான்தான் பொருளாளர் என்று கூறி கடிதம் அனுப்பினார்.

அதிமுக
அதிமுக வங்கி கணக்குகள் இருக்கும் பேங்குகளுக்கு அவர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. அதில், நான்தான் அதிமுகவின் பொருளாளர். என்னுடைய அனுமதி இன்றி பணத்தை எடுக்க யாருக்கும் அனுமதி தர கூடாது. மீறி தந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார். ஆனால் வங்கிகளோ.. நீங்கள் கொடுத்த கடிதத்தில், நீங்கள்தான பொருளாளர் என்பதற்கான உரிய ஆதாரங்கள், போதிய ஆவணங்கள் இல்லை. அதனால் இதை நிராகரிக்கிறோம் என்று கூறியுள்ளது.

கிரீன் சிக்னல்
அதே சமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் பொதுக்குழு கடித்ததோடு திண்டுக்கல் சீனிவாசன்தான் புதிய பொருளாளர் என்று கூறி இன்னொரு கடிதம் அனுப்பியது. இதை வங்கிகள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இதனால் தற்போது வங்கி கணக்குகள் திண்டுக்கல் சீனிவாசன் கைக்கு சென்றுள்ளது. இதனால் அதிமுக வங்கி கணக்குகள் எல்லாம் ஓ பன்னீர்செல்வம் கையைவிட்டு போய் இருக்கிறது. இதனால் அவர் தற்போது கட்சி நிதியை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications