குட்நியூஸ்! சீனாவில் கொரோனா பரவினாலும் இந்தியா பாதிக்காது! ஏன் தெரியுமா? டேட்டா நிபுணர் சொன்ன காரணம்
சென்னை: சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. அங்கு தினசரி கேஸ்கள் 4000ஐ தாண்டி உள்ளது. மக்கள் பலர் சாரைசாரையாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,242 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, சீனாவின் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 5 லட்சம் பேர் கொரோனா காரணமாக மரணம் அடையலாம் என்று கூறப்பட்டு உள்ளது. இல்லையென்றால் 15 லட்சம் பேர் வருட இறுதிக்குள் பலியாவார்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்து உள்ளது.
கொரோனா ஓயவில்லை.. எச்சரிக்கையாக இருப்போம்.. எந்த சூழலையும் எதிர்கொள்வோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தனது ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா கேஸ்கள் சீனாவில் அதிகரிப்பது தொடர்பாக கோவிட் டேட்டா ஆய்வாளர் விஜயானந்த் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,

சீனா - கொரோனா
கேள்வி: சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்?
பதில்: சீனாவில் கொரோனா பிரச்சனை தொடங்கி உள்ளது. இது இந்தியாவை தாக்குமா என்று கேட்டால்.. இல்லை என்பதுதான் பதில். சீனாவில் கொரோனா தொடங்க மெயின் காரணம் என்றால் அங்கே ஜீரோ கோவிட் விதிகளை பின்பற்றியதுதான். அதாவது ஒருவருக்கு கொரோனா வந்தாலும் அவருடன் இருந்தவர்களை எல்லாம் மொத்தமாக தனிமைப்படுத்துவார்கள். இதுதான் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட காரணமாக இருந்தது. கொரோனா பலருக்கும் அப்போது பரவவில்லை.

விதிகள் தளர்வு
தற்போது அங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தி உள்ளனர். ஜீரோ கோவிட் விதிகளை தளர்த்தி உள்ளனர். சமீபத்தில் அவர்கள் கொண்டு வந்த தளர்வுகள் காரணமாக கொரோனா அதிகரிக்கிறது. அப்போது ஜீரோ கோவிட் விதியால் பலருக்கு கொரோனா ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது தப்பித்தவர்கள் எல்லாம் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்பு கொரோனா தாக்காமல் இருந்தவர்கள் இப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதான் காரணம்.

இந்தியா - கொரோனா
கேள்வி: இந்தியாவில் இதனால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்: இந்தியாவில் இதனால் கொரோனா பரவ சான்ஸ் இல்லை. சீனாவில் இப்போதுதான் ஒமிக்ரான் பரவல் ஏற்பட்டு உள்ளது. ஒமிக்ரான் பிரிவின் கிளை வேரியண்ட்களான BA.2.75, BA.5, BQ.1 , XBB ஆகியவைதான் சீனாவில் பரவுகிறது. இதெல்லாம் ஏற்கனவே இந்தியாவில் இருந்தவைதான். இதெல்லாம் இந்தியாவில் ஏற்கனவே பரவியவைதான். இப்போதுதான் சீனாவில் இது பரவுகிறது. ஆனால் இது மீண்டும் இந்தியாவில் பரவ சான்ஸ் இல்லை. நம்மிடையே ஏற்கனவே இதற்கு இம்யூனிட்டி உள்ளது. இந்த வேவ் ஏற்கனவே முடிந்துவிட்டது.
கேள்வி: மீண்டும் மாஸ்க் விதிகளை பின்பற்ற வேண்டுமா?
பதில்: தற்போது மாஸ்க் போட வேண்டிய கட்டாயம் எல்லாம் இல்லை. இந்தியாவில் பெரிய பாதிப்பு இதனால் இருக்காது. ஏற்கனவே நாம் இந்த அலையை கடந்துவிட்டோம்.

சீனா வேவ்
கேள்வி: வயதானவர்கள் சீனாவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.. இந்தியாவில் வயதானவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?
பதில்: அதெல்லாம் அவசியம் இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்தியாவில் டெல்டா பரவியது நினைவு இருக்கிறதா? அப்போது பலர் இறந்தனர். அது இந்தியாவில் தீவிரமாக இருந்த வேவ். அதேபோல் அமெரிக்காவில் ஒமிக்ரான் தீவிரமாக பரவியது. இப்படி எல்லா நாட்டிற்கும் ஒரு வேவ் இருந்தது. ஆனால் சீனாவிற்கு அப்படி எதுவும் இதுவரை இல்லை. இப்போது ஒமிக்ரான் காரணமாக அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நமக்கு டெல்டா பரவலில் ஏற்பட்டது போல அவர்களுக்கு ஒமிக்ரான். அவ்வளவுதான். அதனால் நமக்கு எதுவும் பாதிப்பு இருக்காது. இந்தியாவில் ஏற்கனவே இதெல்லாம் பார்த்துவிட்டோம். என்னுடைய கணிப்பு நமக்கு எதுவும் சிக்கல் இல்லை என்பதுதான், என்று கோவிட் டேட்டா ஆய்வாளர் விஜயானந்த் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications