"செந்தில் பாலாஜி".. ஆளுநர் அப்பவே சொல்லிட்டாரே! 31ம் தேதியே.. மிகப்பெரிய சான்சை மிஸ் செய்த ஸ்டாலின்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா மாற்ற விஷயத்தில் மிக முக்கியமான வாய்ப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மிஸ் செய்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரையை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆளுநருக்கு இது தொடர்பாக பரிந்துரை எழுதி உள்ளார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
என்ன நடந்தது? : ஆளுநரின் இந்த செயல் தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் மே 31ம் தேதியே ஆளுநர் ஆர். என் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததாகவும், அதற்கு ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் நேற்று வெளியான அமைச்சர் பொன் முடி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதாவது ரெய்டு நடக்கும் முன்பே செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அதை முதல்வர் ஸ்டாலின் மறுத்துள்ளார். பொன்முடி அறிக்கையில் தெளிவாக அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களை நீக்க வேண்டும் என ஆளுநர் அவர்கள் 31.5.2023 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே மாண்புமிகு முதலமைச்சர் 1.6.2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக் கூறி பதில் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில், ஆளுநரின் கடிதம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சருக்குத்தான் அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதையும்- இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும் இல்லை என்பதையும் தெளிவாக - அரசியல் சட்டப்பிரிவு 164(1) -ஐ மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார், என்று கூறப்பட்டு உள்ளது.
ஆளுநர் பரிந்துரை: அதாவது செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடக்கும் முன்பே.. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
ஸ்டாலின் இதை மறுத்த நிலையில் சில நாட்களில் செந்தில் பாலாஜி வீட்டிற்கு வருமான வரித்துறை ரெய்டு வந்துள்ளது. அதை தொடர்ந்து அமலாக்கத்துறை ரெய்டு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் இந்த பரிந்துரையை அப்போதே பொதுவில் வெளியிட்டு இருந்தால் செந்தில் பாலாஜிக்கு பிரஸர் கொடுக்கப்படுகிறது என்ற பிம்பம் உருவாகி இருக்கும்.
பாருங்க ஆளுநர் நீக்க சொன்னதும் ரெய்டு வருகிறார்கள் என்ற பிம்பம் உருவாகி இருக்கும். அரசியல் ரீதியாக திமுகவிற்கு இது வலு சேர்த்து இருக்கும்.
அதேபோல் ரெய்டுக்கு முன்பே ஆளுநர் செய்த பரிந்துரையும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அப்போதே இதை பொதுவில் சொல்லி இருந்தால் அதோடு இந்த விவகாரமும் அரசியல் ரீதியாக வேறு மாதிரி சென்று இருக்கும்.
ஆனால் மே 31ம் தேதியே ஆளுநர் ஆர். என் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததை ஆளும் தரப்பு வெளியே விடாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications