டெல்லி முழுக்க பரவிய "மெசேஜ்".. அமைச்சராக்கப்படாத அண்ணாமலை.. அந்த 2 மணி நேரம் என்ன நடந்தது?
சென்னை: பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நேற்று அமைச்சராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் அவர் அமைச்சர் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக தனிப்பட்ட வகையில் பெற முடியாமல் படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நேற்று பாஜக பதவி ஏற்றது.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் நேற்று அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
அண்ணாமலை: அமைச்சரவை பதவி ஏற்பிற்கு முன் காலையில் அண்ணாமலை அமைச்சராக போவதாக செய்திகள் வந்தன. டெல்லி மீடியா பிரிவினரிடம் "சிலர்" அனுப்பிய மெசேஜ்தான் இப்படி அண்ணாமலை அமைச்சராக போவதாக வெளியான செய்திகளுக்கு காரணம்.
அண்ணாமலை அமைச்சராக போகிறார் என்றதும் தமிழ்நாட்டு மீடியாக்களில் இதே செய்தி பரவியது. இதற்கெல்லாம் டெல்லியில் அந்த மெசேஜை அனுப்பிய சோர்ஸ்தான் காரணம். பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்கும் எண்ணம் தேசிய பாஜக தலைமைக்கு இருப்பதாக கூறப்பட்டது.
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியாவில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதி. இந்திய அளவில் கூகுள் தொடங்கி டிவி வரை பல இடங்களில் இந்த தொகுதி பற்றி தேடப்பட்டது. ஊடகங்களில் இருக்கும் எஸ்இஓ இன்ஜினியர்களுக்கு தெரியும்.. இந்த தொகுதி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று. அதற்கு காரணம் அண்ணாமலை. இங்கே தோல்வி அடைந்த நிலையில் ராஜ்ய சபா வழியாக அண்ணாமலை அமைச்சர் ஆவார் என்று தகவல் வந்தது.
டீ பார்ட்டி: நேற்று இரண்டு டீ பார்ட்டி நடந்தது. ஒன்று என்டிஏ தலைவர்கள், கட்சி தலைவர்கள் பார்ட்டி. இதற்கு அண்ணாமலை சென்றதை வைத்து பலரும் அவர் அமைச்சர் என்று நினைத்தனர். அதன்பின் இன்னொரு டீ பார்ட்டி நடந்தது. இதற்கு அண்ணாமலை அழைக்கப்படவில்லை.
இதுதான் உண்மையில் அமைச்சரவை பார்ட்டி. உண்மையில் புதிதாக அமைச்சர்களாக போகும் நபர்கள் கலந்து கொண்ட பார்ட்டி. இதில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்றதும் அவருக்கு அமைச்சரவை இல்லை என்பது உறுதியானது.
2 மணி நேரம்: இடைப்பட்ட இரண்டு மணி நேரம்தான் அண்ணாமலை ரசிகர்கள் எல்லாம் அவர் அமைச்சராக போகிறார் என்று கொண்டாட தொடங்கினர். அவருக்கு என்ன விதமான பொறுப்பு கொடுக்கப்படும், நிதி அமைச்சர் ஆகிறாரா .. அடுத்த மாநில தலைவர் யார் என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டது.
ஆனால் கடைசியில் அண்ணாமலையே ஊடகங்களின் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு, தான் அமைச்சராகவில்லை என்று சில ஊடகங்களில் விளக்கம் கொடுத்தார். அண்ணாமலை அரசியலுக்கு புதிது என்பதால்.. அவர் மீது டெல்லி இன்னும் முழுமையாக இம்ப்ரஸ் ஆகவில்லை என்பதாலும் அவருக்கு அமைச்சரவை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications