நல்லா ஏமாத்துறாங்களே.. இவங்க 2 பேரையும் தூக்குங்க.. சிஎஸ்கேவில் பெரிய பிரச்சனை! என்ன செய்வார் தோனி?
சென்னை: சிஎஸ்கே அணியில் ஆடும் முக்கியமான 2 வீரர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு வீரர்கள் அணிக்கு எந்த பலனும் அளிக்காமல் உள்ளனர்.
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. பேட்டிங் பிட்சை கணிக்க தவறியது, டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டாவது இன்னிங்சில் பனி காரணமாக பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது ஆகியவை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 144/6 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகமாக துபே மட்டுமே 48 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி ராணா, ரிங்கு சிங் அதிரடி காரணமாக தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியது. இரண்டு பேருமே அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். இதனால் கொல்கத்தா அணி 18.3 ஓவரிலேயே எளிதாக 147-4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சிஎஸ்கேவின் ப்ளே ஆப் வாய்ப்பு வெகுவாக குறைந்து உள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.
பவுலிங்
சிஎஸ்கே பவுலிங்கில் மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, சாகர் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். இவர்களின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுத்துள்ளது.
ஆனால் மொயின் அலி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவரின் பேட்டிங் பார்மில் இல்லை. பவுலிங்கும் பெரிய பார்மில் இல்லை. அவர் பெரிதாக எந்த போட்டியிலும் விக்கெட் எடுக்கவில்லை.
பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பேட்டிங்கிலும் எந்த இடத்தில் இறங்கினாலும் பெரிதாக ஆடுவது இல்லை. அதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் சாண்ட்னர் ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சிஎஸ்கே வீரர் மிட்சல் சாண்ட்னர் சிறப்பாக ஆடினார். மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.
இதனால் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் தற்போது தீக்சனா மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. அவரும் விருப்பமே இன்றி ஆடிக்கொண்டு இருக்கிறார். ஆப் ஸ்பின் பவுலராக இருந்து கொண்டு சென்னை போன்ற ஸ்பின் பிட்சில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். அவரிடத்தில் வேறு வீரர் இருந்திருந்தால் அழகாக விக்கெட் விழுந்திருக்கும்.
இதனால் இவரையும்உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு ஸ்பின் பவுலரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் இருவரும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக அணிக்குள் மிட்சல் சான்டர் மற்றும் ஒரு இந்திய வீரரை கொண்டு வர வேண்டும். இவர்கள் இந்திய அணியில் இருப்பதால்தான் அணிக்குள் பெரிய குழப்பமே நிலவி வருகிறது.
இவர்களை நீக்க வேண்டும். மாறாக தீக்சனாவிற்கு பதிலாக ராஜவர்தான் ஹங்கரேக்கர் போன்றவர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். அவர் நல்ல ஹிட்டர். அதேபோல் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடிய வீரர். அதனால் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications