விருப்பமே இல்லாதவரை.. பிடித்து இழுத்து வைத்து.. ஏங்க இப்படி? சிஎஸ்கேவிற்கு போன வார்னிங்! அப்போ தோனி?
சென்னை: சிஎஸ்கே அணியில் இருக்கும் முக்கியமான வீரர் ஒருவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து அதிரடியாக ஆடி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது. 5 போட்டிகளில் வென்றுள்ளது.

இதனால் புள்ளிகள் பட்டியலில் தற்போது சிஎஸ்கே அணி 2ம் இடத்தில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் வீரர் ஒருவருக்கு எதிராக ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதிப்படி ஆட்டத்தின் ஒரு பகுதியில் வீரரை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக முதல் இன்னிங்சில் ஒரு அணி பேட்டிங் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்யும் போது ஒரு பேட்ஸ்மேனை தூக்கிவிட்டு கூடுதலாக ஒரு பவுலரை கொண்டு வர முடியும். உதாரணமாக சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ருத்துராஜ் நன்றாக ஆடி 100 அடிக்கிறார்.
அவர் சிறப்பாக ஆடினாலும் கூட பவுலிங் செய்ய மாட்டார். இரண்டாவது இன்னிங்சில் அவர் பவுலிங் செய்யாமல் பீல்டிங் மட்டும் செய்வதில் பலன் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதில் கூடுதல் ஒரு முழுநேர பவுலர் களமிறக்கப்பட்டார் என்றால் எப்படி இருக்கும். இந்த வசதியைத்தான் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வந்துள்ளது.

இனி எல்லா அணிகளும் 11 வீரர்களை கொண்ட அணி + 1 வீரரை மனதில் வைத்து இருக்கும். பேட்டிங் செய்யும் போது கூடுதலாக அதிக பேட்ஸ்மேன் கொண்ட ஒரு அணி இருக்கும். அதன்பின் பவுலிங் செய்யும் போது ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஒரு பவுலரை சேர்க்கும்.
அதுவே முதலில் பவுலிங் செய்கிறார்கள் என்றால் ஒரு முழு நேர பவுலரை கூடுதலாக களமிறக்கி ஆடுவார்கள். அதன்பின் பேட்டிங்கில் அவரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வருவார்கள். இதனால் இந்த ஐபிஎல் தொடரே மிகவும் வித்தியாசமே இருக்க போகிறது. அந்த வகையில் சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்ததில் சிஎஸ்கே அணி 4 இம்பாக்ட் வீரர்களை மனதில் வைத்துள்ளது. டாஸை பொறுத்து இதில் ஒருவரை சிஎஸ்கே பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கேவில் ஆகாஷ் சிங் பவுலிங் இம்பாக் வீரராக பயன்படுத்தப்பட்டு வருகிறார். பேட்டிங் செய்யும் போது அவருக்கு பதிலாக அம்பதி ராயுடு களமிறக்கப்படுகிறார்.
ஆனால் தற்போது அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 5 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது.
இன்னிங்ஸ்:- 5
ரன்கள்:- 74
சராசரி:- 24.67
ஸ்டிரைக் ரேட்:- 148
அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.
அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications