காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகாதது ஏன்?.. விட்டு விட்டு மழை எப்படி?- வானிலை மைய இயக்குநர் விளக்கம்
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாவிட்டாலும், தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கின்றது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நெல்லை
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

24 மணி நேரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

காற்றின் வேகம் குறைவு
தொடர்ந்து பேசிய அவர், காற்றழுத்த வேறுபாடு குறைவு காரணமாக காற்றின் வேகம் குறைந்துள்ளது, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போதிய அழுத்தம் இல்லை என்ற அவர் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிட்டாலும், சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.

குமரி கடல்
கடந்த 24 மணி நேரத்தில், ராமேஸ்வரம் 8 செ.மீ. மழையும், திருப்பூண்டி, திருக்குவளை தலா 5 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகி உள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

48 மணி நேரம்
மேலும், 29-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இது தமிழக பகுதிகளை நெருங்குமா என ஓரிரு நாளில் தெரியவரும். அதேபோல் காற்றின் அழுத்த மாறுபாடு மற்றும் கடல் காற்று காரணமாக மழை இடைவெளி விடும் சமயத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது.

புவியரசன் விளக்கம்
காற்றழுத்த தாழ்வு பகுதி ஏன் உருவாகவில்லை என்பது குறிக்கு புவியரசன் கூறுகையில் காற்றில் உந்துதல் குறைவாக இருக்கிறது. அதனால் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் அழுத்தமும் குறைந்துள்ளது. இதனால் காற்றழுத்தம் உருவாக தாமதமானாலும் காற்றின் சுழற்சியால் மழை விட்டு விட்டு பெய்யும் என புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications