கிளாம்பாக்கத்தில் என்னங்க இது? சட்டென திரும்பி பார்த்தால் சூர்யா! அப்பறம்தான் புரியுது! செம முடிவு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு நடந்த சம்பவம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அங்கே பயணம் செய்ய சென்ற மக்கள் பலரும் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்லும் அளவிற்கு நேற்று முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக இது உள்ளது. இங்கே பேருந்து ஏற தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருகின்றனர்.

சென்னையின் மிகப்பெரிய அடையாளமாகவும் இந்த பேருந்து நிலையம் மாறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே போதிய ஏடிஎம்கள் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. முதலில் ஒரு ஏடிஎம் இருந்தது. அதன்பின் இரண்டு ஏடிஎம்தான் இருந்தது. இது மக்களுக்கு கடுமையான பிரச்சனைகளை கொடுத்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே மொத்தமாக 5 வங்கிகளின் 5 ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 5 ஏடிஎம்கள் காரணமாக மக்கள் இடையே மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
ரயில்நிலையம்: புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ரயில் நிலையம் தமிழ்நாடு அரசின் செலவில் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ. 100 கோடி ரூபாயில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
சுவாரசிய சம்பவம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு நடந்த சம்பவம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அங்கே பயணம் செய்ய சென்ற மக்கள் பலரும் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்லும் அளவிற்கு நேற்று முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
அங்கே பெரிய பெரிய திரைகளில் தற்போது விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக அங்கே நேற்று நடிகர் சூர்யாவின் கங்குவா சிஸ்லர் திரையிடப்பட்டது. அங்கே இவர்கள் விளம்பரம் கொடுத்த நிலையில் அது திரையிடப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரிய பெரிய திரைகளில் தற்போது விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தினமும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் செல்கின்றனர். அவர்களை உடனடியாக இந்த விளம்பரம் சென்று சேரும்.
இதை எல்லாம் மனதில் வைத்ததே விளம்பரம் கொடுக்கப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக அங்கே நேற்று நடிகர் சூர்யாவின் கங்குவா சிஸ்லர் திரையிடப்பட்டது. அங்கே இவர்கள் விளம்பரம் கொடுத்த நிலையில் அது திரையிடப்பட்டது. இதை ரசிகர்கள், மக்கள் பலரும் அங்கேயே நின்று நீண்ட நேரம் பார்த்தது கவனம் பெற்றது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications