நாஞ்சில் சம்பத்துக்கு ஏதோ ஆயிடுச்சு.. திடீர்னு மனநலம் பாதிப்பு வேற.. போலீசுக்கு போன அதிமுக இன்பதுரை
நாஞ்சில் சம்பத் மீது அதிமுக தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது
சென்னை: திமுகவை சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதித்து இருப்பதால், அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது என்று போலீசுக்கு போயுள்ளது அதிமுக தரப்பு.
சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான இன்பதுரை, டிஜிபி கமிஷனர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் உள்ளதாவது:
சென்னை சேப்பாக்கத்தில், சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில், அக்கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் சம்பத் என்பவர், எங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பற்றி அநாகரிகமாக பேசினார்.

தமிழிசை
இப்போது, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை பற்றியும், கடந்த 2017ல் மேடையில் அவதுாறாக பேசினார்... அவர் மீது, பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் தான் உள்ளது... சம்பத்துக்கு, 2015ல் திடீரென மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இன்பதுரை
சமீபகாலமாக அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது... அதனால்தான் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து, அநாகரிகமாக மேடைகளில் பேசி வருகிறார்... அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது... அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்பதுரை
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து இன்பதுரை பேசும்போது, "கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழக முதல்வரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாஞ்சில் சம்பத் அதிமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், குறித்து அவதூறு செய்யும் நோக்கில் உள்நோக்கத்தோடு அநாகரிகமாக பேசியது சட்டப்படி தவறு.

நாஞ்சில் சம்பத்
கடந்த 2017-ம் ஆண்டு பல்லாவரம் காவல் நிலையத்தில் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நாஞ்சில் சம்பத் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அதில் அரசியல் தலைவர்களை அநாகரிகமாக பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் இனிமேல் இப்படியெல்லாம் அவதூறாக யாரையும் பேசமாட்டேன் என்றும் கோர்ட்டிலேயே உறுதி அளித்திருந்தார்.

இன்பதுரை
இப்போது அந்த வழக்கு விசாரணை நிலுவையில்தான் இருக்கிறது.. இதுபோன்ற அநாகரிகமான முறையில் இனி பேசுவதில்லை என்று கோர்ட்டில் தெரிவித்த நாஞ்சில் சம்பத், உறுதிமொழிக்கு எதிராக நடந்து கொண்டு வருகிறார்.. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.. அதனால், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப்பட்டார்... பிறகு சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மனநலம்
தற்சமயம், அவர் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அவருக்கு நரம்பு மண்டல பிரச்சனையினால் மனநலமும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதனால், நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளும் எந்த பொதுக் கூட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி அளிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார் இன்பதுரை.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன?












Click it and Unblock the Notifications