ஆமா..அமித் ஷா ஜிவி பிரகாஷை பார்த்தது ஏன்? அதுவும் 2 மணி நேரம் அப்படி என்ன பேசுனாங்க? இவ்வளவு இருக்கா
சென்னை: நேற்று சென்னை வந்த அமைச்சர் அமித்ஷா அரசியல் சாராத பிரபலங்களுடன் திடீரென ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சுமார் 2 மணி நேரம் இவர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக தீவிரமாக பணிகளை செய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் வேலூரில் நடக்கும் 9 ஆண்டு பாஜக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொள்ள இருக்கிறார்.

இதற்காக அமித் ஷா நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் அமித் ஷா சென்னையில் உள்ள கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு சென்று தங்கினார். அங்கு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா இவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
பாஜக கட்சி நிர்வாகம், நாடாளுமன்ற தேர்தல்., கூட்டணி அமைப்பது, தொகுதிகள் தேர்வு செய்வது, திமுகவிற்கு எதிராக வியூகம் வகுப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமித் ஷா நேற்று ஆலோசனை செய்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடன் சுமார் ஒரு மணி நேரம் அமித் ஷா ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்டிங்: நேற்று சென்னை வந்த அமைச்சர் அமித்ஷா அரசியல் சாராத பிரபலங்களுடன் திடீரென ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சுமார் 2 மணி நேரம் இவர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் சார்ந்த, சாராத பிரபலங்கள் என்று பல துறைகளை சேர்ந்த பிரபலங்களுடன் சந்திப்பு நடத்தினார். வின் தொலைக்காட்சி தேவநாதன், விளையாட்டு துறையைச் சேர்ந்த லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகரன், இந்தியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், தாஜ், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்நல்லி குப்புசாமி, பாஸ்கரன், அனிதா பால்துரை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆர்காட் நவாப், டேப்லட்ஸ் இந்தியா, பி.கே.எஃப், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கல்வி, மருத்துவம், சினிமா, இசை, மதம், தொழிலதிபர்கள், கிரிக்கெட் ஆகிய துறைகளை சேர்ந்த பிரபலங்களுடன் அமித் ஷா சந்திப்பு நடத்தினார். மொத்தம் 24 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் 2 மணி நேரம் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
பொதுவாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியல் சாராத பிரபலங்களின் ஆதரவை மோடி - அமித் ஷா கேட்பது வழக்கம். அந்த வகையில் அமித் ஷா நேற்று இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் இது தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு தொடங்கி பல்வேறு சமூக ரீதியான விஷயங்களில் முற்போக்கான கருத்துக்களை கூறியவர் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications