அஸ்திவாரமே காலி! தெற்கில் அதிமுகவிற்கு "ஆணி" அடித்த அண்ணாமலை.. ஓ தேவரை பற்றி பேசியது இதுக்குத்தானா?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை தேவர் விவகாரத்தை கையில் எடுக்க வேறு காரணம் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது. முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார். இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கூட்டணி முறிவு: இதையடுத்தே அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது என எடப்பாடியின் உத்தரவின் பேரில் நேற்று அழுத்தமாக தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு முழுவதும் ஸ்வீட் கொடுத்து உற்சாகமடைந்தனர் அதிமுகவினர். பாஜகவையும் அண்ணாமலையையும் அதிமுக கடுமையாக விமர்சித்த நிலையில், பாஜக நிர்வாகிகளும் அதிமுகவை விமர்சித்தனர்.
என்ன காரணம்?: அண்ணாமலை தேவர் விவகாரத்தை அண்ணாமலை கையில் எடுக்க வேறு காரணம் உள்ளது என்றும் கூறுகிறார்கள். முக்குலத்தோருடன் அதிமுக நெருக்கம் ஆகாமல் தடுத்து, அந்த இடத்தை பாஜக பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை அண்ணாமலை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தேவர் - அண்ணா என்ற விவாவதை ஏற்படுத்தினால் அதிமுக அண்ணாவின் பக்கம் நிற்க வேண்டும். அப்படி நிற்கும் பட்சத்தில் தேவரை பகைக்க வேண்டிய நிலை அதிமுகவிற்கு ஏற்படும். இப்படி ஒரு விவாதத்தை ஏற்படுத்தவே தேவர் - அண்ணா என்ற விவாதத்தை அண்ணாமலை ஏற்படுத்தியதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர்.பரமேஸ்வரி இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், ஆக.. அடுத்தமாதம் பசும்பொன் தேவர் சமாதிக்கு அதிமுக தலைமை போக முடியாதபடி சுற்றி ஆணி அடித்துவிட்டார் அண்ணாமலை. இனி தேவர் சமாதிக்கு பழனிச்சாமியோ ஜெயகுமாரோ சென்றால் எப்படியான கேள்விகள் எழும், என்ன மாதிரி எதிர்ப்புகள் எழும் என்பது ரகசியமல்ல.
அண்ணா பற்றி தேவர் சொன்னதை கண்டித்துவிட்டு, இனிஅப்பக்கம் செல்ல முடியாது, ஒரு அடி கூட வைக்க முடியாது. அண்ணாதுரையினை கடுமையாக காலமெல்லாம் எதிர்த்த தேவரின் வாக்கியதுக்காக அண்ணாமலையினை கண்டித்துவிட்டு, அப்பக்கம் செல்வது தேவருக்கான அவமரியாதை என்றே கருதப்படும்.
அதிமுகவின் வலுவான தென் மாவட்ட வாக்கு வங்கி இங்கே அடி வாங்கலாம். ஐ.பி.எஸ் படிப்பெல்லாம் படித்தவன் முன்,அடிவரிடு அரசியல்வாதிகள் நிற்க முடியாது என்பது சரியாகத்தான் இருக்கின்றது, என்று கூறி உள்ளார். இதன் காரணமாகவே அண்ணாமலை தேவர் விவகாரத்தை அண்ணாமலை கையில் எடுக்க காரணம் என்கிறார்கள்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications