"நம்பர் 1".. ஸ்டாலினுக்குதான் "முதல் மரியாதை" போல.. அந்த தலைவர் எங்கே? மேலிடம் போட்ட சைலண்ட் ஆர்டர்
சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்தபோது, எடப்பாடி, ஓபிஎஸ்ஸை தனித்தனியாக சந்தித்து ஏன் பேசவில்லை? பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசிக்கவில்லையே? ஏன் என்ற கேள்வி இன்னமும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. அது தொடர்பான தகவல்கள் தினமும் வட்டமடித்தபடியே உள்ளன.. இப்போதும் உறுதிப்படுத்தப்படாத சில தகவல் கசிந்து வருகிறது.
பிரதமர் மோடி சென்னை வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போவதாக செய்திகள் வெளியானது.. அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க போவதாகவும் சொன்னார்கள்..
இரு தரப்புக்குமே பிரதமர் மோடி அப்பாயிண்மென்ட் தந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகவும், பரபரப்பு எகிறியது.. இரு தரப்பிலும் நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடியை பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வரவேற்க போவதாகவும், அப்போது இரு தரப்புமே பேச உள்ளதாகவும் கூறப்பட்டது..

எடப்பாடி: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து பேச மொத்தம் 15 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்ஸுக்கு வெறும் 10 நிமிஷம்தான் பிரதமரை சந்திக்க டைம் தந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால், எந்தவிதமான சந்திப்பும் நடக்கவில்லை.. சென்னை வந்த பிரதமரை, ஆளுநர், முதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனரே தவிர, இருவரிடமும் பிரதமர் மோடி பேசவில்லை..
அப்பாயிண்மென்ட்: இவர்களில், தனியாக யாரை சந்தித்து பேசினாலும் அது தேவையில்லாத நெருடலை தந்துவிடும்.. இதில், எடப்பாடியை தனியாக சந்தித்து பேசினாலும் அது பிரச்சனை ஆகிவிடும்.. ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனை.. கவர்னரை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனைதான்.. அண்ணாமலையையும் தனியாக சந்தித்தாலும் பிரச்சனை.. அதனால், மொத்த பேரையும் ஒன்றாக சந்தித்துவிட்டு, கிளம்பவே பிரதமர் மோடி நினைப்பாரே தவிர, தனித்தனியாக பேச வாய்ப்பே கிடையாது என்று அரசியல் விமர்சகர்களும் இதை பற்றி கருத்து சொன்னார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக சில ஸ்பெஷல் நமக்கு கிடைத்தன.. அதாவது, "மோடியை சமீபத்தில் தம்பிதுரை சந்தித்துவிட்டு எடப்பாடியிடம் பேசிய அவர், சென்னை ஏர்போர்ட்டில் உங்களை மட்டும் சந்திக்க பிரதமர் சம்மதித்துவிட்டார். 15 நிமிடங்கள் பேசமுடியும். வழியனுப்ப நீங்கள் செல்லும்போது அவரை நீங்கள் சந்திக்கலாம் என தெரிவித்திருக்கிறார். ஆனால், மோடியை தம்பிதுரை சந்தித்தபோது, "இருவரையும் (ஓபிஎஸ், இபிஎஸ்) நாங்கள் பிரித்து பார்க்க முடியாது. சென்னையில் ஏர்போர்ட்டுக்கு வருபவர்களில் லிஸ்டில் அவர்கள் இருப்பார்கள். நேரமிருந்தால் சந்திக்கிறேன்" என்று மட்டுமே சொல்லியிருக்கிறார் மோடி.

தம்பிதுரை நம்பிக்கை: ஆனால், இதைத்தான் மோடி நேரம் ஒதுக்கிவிட்டார் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்தாராம்.. அதையே எடப்பாடியும் வெளிப்படுத்தினாராம்.. தம்பிதுரையின் வார்த்தையில் நம்பிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமி, சந்திப்பு நடக்கும் போது பேச வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் ஒரு கடிதமாக தயாரித்தும் வைத்திருந்தார். அந்தளவுக்கு இந்த சந்திப்பை முக்கியமாக கருதினார் எடப்பாடி. வழியனுப்பும் போது தன்னை அழைத்து தனிப்பட்ட முறையில் பேசுவார் என்றும் மிக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், எடப்பாடியையும் பன்னீரையும் மோடி சந்திக்கவில்லை. யாருக்குமே நேரமும் தரவில்லை.
நேரம் தந்திருந்தால்தானே அது ரத்து செய்வதற்கு? ஆக, நேரம் தந்திருப்பதாக தம்பிதுரையை நம்பி எடப்பாடிதான் சொன்னாரே தவிர, மோடியின் அதிகாரப்பூர்வ பயணத்தில் எடப்பாடியை சந்திப்பதாக பட்டியலில் இடம்பெறவில்லை. ஆக, தம்பிதுரை சொன்னதை நம்பி ஏமாந்துபோன எடப்பாடி, இந்த ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் டெல்லி சென்று, மோடியை சந்தித்தே ஆக வேண்டும் என பகீரத முயற்சியில் இறங்கியுள்ளாராம்.. மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்காமல் போவதற்கு இப்படி ஒரு காரணம் சொல்லப்பட்டு வரும்நிலையில், அண்ணாமலை ஏன் அன்றைய தினம் சென்னை வரவில்லை என்பது குறித்த தகவல்கள் வட்டமடிக்கின்றன.

அண்ணாமலை எங்கே: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வந்ததால், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று அப்போதே இதுகுறித்து தகவல் வெளியானது.. ஆனால், இப்போது இன்னொரு தகவல் கசிந்துள்ளது.. மோடி சென்னைக்கு வந்ததால், அவரை வரவேற்க சென்னை வருவதற்கு அண்ணாமலை அன்றைய தினம் பிற்பகல் 12.40 மணி ஃபிளைட் டிக்கெட் எடுத்திருந்தாராம்.. ஆனால் மோடியை வரவேற்க சென்னைக்கு செல்ல வேண்டாம், அதை ஒன்றிய அமைச்சர் முருகன் பார்த்துக் கொள்வார் என்று டெல்லி தலைமை சொல்லிவிட்டதாம்..
அதுமட்டுமல்ல, தாங்கள் சொல்லும்வரை டெல்லியில் தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டதாம்.. அதனால்தான் பிரதமர் மோடியை வரவேற்க சென்னைக்கு அண்ணாமலை வரவில்லை.. அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால், இந்த தகவலை பாஜக தரப்பில் மறுக்கிறார்கள்.. கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் தங்கி கடந்த 2 நாட்களாக பணியாற்றி வருகிறார் அண்ணாமலை.. பிரதமரின் அனுமதியை பெற்று தான், அவர் அங்கு பணியில் ஈடுப்பட்டுள்ளார் என்கிறார்கள்.. அந்தவகையில், பிரதமர் மோடி நிகழ்ச்சியை அண்ணாமலை வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் தந்துள்ளர்கள்.
நயினார் ப்ளான்: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ், பாரிவேந்தர், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோர் காத்திருந்தும்கூட, பிரதமர் அவர்கள் யாரையும் சந்தித்து பேசவில்லை.. இவர்கள் யாரும் பிரதமர் மோடி தங்கியிருக்கும் அறைக்கு அருகே வரவேண்டாம் என்றும், விமான நிலையத்தில் புறப்படும் இடத்தில் காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டார்களாம். இதைக்கேட்டு, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்த நிலையில், தனித்தனியாக பேசவிருந்த பிளானும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது..
ஆனாலும் வேறு வழியில்லாமல் அமைதியாக காத்திருந்தார்களாம்.. மைசூர் செல்வதற்காக வெளியில் வந்த மோடி, அதிமுக, பாஜக தலைவர்களை பார்த்து, "வணக்கம்" சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றாராம்.. ஆனால், பாஜக சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மட்டும், பிரதமர் பங்கேற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது... எல்.முருகனிடம் மட்டும் மோடி தனியாக சந்தித்து பேசிவிட்டு சென்றிருக்கிறார். ஆக, சென்னை வந்த பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் தவிர பிற அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாருமே சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதை இணையவாசிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications