சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன பண்றீங்க? சட்டென வந்து இறங்கிய ஸ்டாலின்.. அருகிலேயே மேயர் பிரியா.. பார்த்ததும் அரண்ட அதிகாரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அவர் அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார்.

சென்னையில் கடந்த வாரம் விடாமல் மழை பெய்தது. தொடர்ந்து தீவிர மழை பெய்தாலும் பெரிதாக சாலைகளில் வெள்ளம் தேங்கவில்லை. மழை பெய்த சில நிமிடங்களில் வெள்ளம் வெளியேறியது.

இதற்கு சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் வெள்ள நீர் குழாய்கள்தான் காரணம். வெள்ளம் வடிவதற்காக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

படிப்பு அவசியம்..பெண்கள் சொந்தக்காலில் நில்லுங்கள்..அப்பாவாக சொல்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் டச் படிப்பு அவசியம்..பெண்கள் சொந்தக்காலில் நில்லுங்கள்..அப்பாவாக சொல்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் டச்

குழாய்கள்

குழாய்கள்

கடந்த வருடங்களில் சென்னையில் மழை பெய்தாலே சாலையில் பெரிய வெள்ளம் ஏற்படும். போதிய வடிகால் வசதி இல்லாமல் இருந்ததே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றபின் சென்னையில் இனி வெள்ளம் ஏற்படாது என்று கூறினார். ஆனால் கடந்த வருடம் ஜூலையிலேயே மழை பெய்து, சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிகால் இல்லை.

 வெள்ள நீர்

வெள்ள நீர்

இதனால்தான் சென்னையில் தண்ணீர் தேங்குகிறது. அடுத்த வருடம் மழை காலத்திற்கு முன்பாக வடிகால் வாரியம் அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். இதை முன்னிட்டு வெள்ள நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்க தொடங்கின. சென்னையில் இந்த அக்டோபருக்குள் வடிகால் வாரியம் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை சாலைகள்

சென்னை சாலைகள்

சென்னை சாலைகளில் ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் வெளியேறுவதற்கு வசதியாக அங்கே பெரிய பெரிய குழாய்கள் போடப்பட்டு வருகின்றன. இந்த குழாய்கள் அமைக்கும் பணிகளால் பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மழை காலம் தொடங்கும் முன் பணிகளை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆய்வு

ஆய்வு

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். கொளத்தூரில் வெள்ள நீர் வடிகால் பணிகள் செய்யப்படுகின்றனவா என்று ஆய்வு செய்தார். கூடவே மேயர் பிரியா உடன் இருந்தார். இவர்கள் சட்டென வந்ததை எதிர்பார்க்காத அதிகாரிகள்.. அரண்டு போய் இவர்களை பார்த்தனர். இங்கு பணிகள் எப்படி நடக்கின்றன என்று முதல்வர் ஆய்வு செய்தார். திருவள்ளூருக்கு வேறு பணிகளை பார்க்க சென்றவர், இங்கு திடீரென போகும் வழியில் ஆய்வு செய்தார்.

கேள்வி

கேள்வி

அங்கு இருந்த அதிகாரிகளிடம்.. என்ன பண்றீங்க.. வேலை வேகமாக நடக்கிறதா? சரியாக குழிகளை தோண்டி குழாய்களை போடுங்கள். மேம்போக்காக செய்ய வேண்டாம் என்று கூறினார். அதன்பின் அங்கு இருந்த மேப்பை காட்டி மேயர் பிரியா முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தார். அதாவது குழாய்கள் எங்கே எல்லாம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தார். இதை கேட்ட பின் வேலைகளை மழைக்கு முன் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

English summary
Why did CM Stalin and Chennai Mayor Priya and inspects flood water drainge works? Why did CM Stalin and Chennai Mayor Priya and inspects flood water drainge works? சென்னையில் இன்று கொளத்தூர் தொகுதியில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அவர் அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X