"ஆபரேஷன் அமுதா".. ஸ்டாலின் டீமில் இணைந்த டாப் ஐஏஎஸ் அதிகாரி.. பின்னாடி இப்படி ஒரு பிளானா? அதிருதே
சென்னை: நேற்று தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதில் அமுதா ஐஏஎஸ் உள்துறைக்கு கொண்டு வரப்பட்டது மிக பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
தமிழ்நாடு அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஐஏஎஸ்: இதையடுத்து பல துணை செயலாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.
முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அமுதா ஐஏஎஸ்: இதில் அமுதா ஐஏஎஸ் உள்துறைக்கு கொண்டு வரப்பட்டது மிக பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
பி அமுதா ஐஏஎஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கம். அவரின் இறுதிச்சடங்கு பணிகளை செய்ததில் இவர் அதிகம் கவனிக்கப்பட்டார் . வெள்ளை உடையில் தனி ஆளாக எல்லா பணிகளையும் அவர்தான் செய்தார்.
மிக பெரிய அனுபவம் கொண்ட இவர், கருணாநிதி ஆட்சியின் போது துணை ஆட்சியராக பணி உயர்வு பெற்றார். பின் ஆட்சியராக பணி உயர்வு பெற்றார். சென்னையில் வெள்ளம் வந்த போது இவர் செய்த பணிகளுக்காக பெரிய பாராட்டு பெற்றார்.
தாம்பரம் மணிமங்கலத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு பாராட்டுகளை பெற்றார். முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர் இவர். செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளை தடாலடியாக அகற்றியவர், இப்படி பல புகழுக்கு சொந்தக்காரர்.
கருணாநிதி மறைவின் போது மெரினாவில் கருணாநிதியை புதைப்பது தொடர்பான வழக்கு ஒன்று நடந்து கொண்டு இருந்ததால், 11 மணிக்குத்தான் இவருக்கு முறையாக எங்கு இறுதி சடங்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்பின் துரிதமாக செயலாற்றி ராஜாஜி அரங்கிலும், மெரினாவில் பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். இதற்கு இடையில் ஊர்வலம் நடக்க வேண்டிய பகுதியிலும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்துள்ளார். திமுக சார்பாக, இவருடன் எம்எல்ஏக்கள் ஏவா வேலு மற்றும் சேகர் பாபு ஆகியோர் தொடர்பில் இருந்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் மூலம், தொண்டர்களை சிறப்பாக கட்டுப்படுத்தி இருக்கிறார்
மத்திய பணி: அதன்பின் மத்திய பணிக்கு அமுதா ஐஏஎஸ் அழைக்கப்பட்டார். அங்கே பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக இருந்தார்.
கடந்த 2021ம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த அமுதாவை விடுவித்து அதற்கான ஆணையை சமீபத்தில் பிறப்பித்திருந்தது மத்திய அரசு.
மாநில அரசு இவரை மீண்டும் கேட்டதாக அப்போதே செய்திகள் வந்தன.
அதனடிப்படையில், மாநில பணிக்கு திரும்பும் அமுதா, எந்த துறையில் நியமிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அப்போதே இருந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது.
மாற்றம் இல்லை: அப்போது வேறு வழியின்றி அவருக்கு தற்காலிகமாக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது உள்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. உள்துறை என்பது முதல்வர் ஸ்டாலினின் துறை. ஸ்டாலின் டீமிற்கு வந்து இருக்கும் அமுதாவுக்கு முக்கியமான சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி கீழ் சென்னையில் கொஞ்சம், கொலை சம்பவங்கள் அதிகரித்தன. 2ம் கட்ட நகரங்களிலும் கிரைம்கள் அதிகரித்தன. இதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு சென்றுள்ளது.
முக்கியமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த அவருக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
குற்றங்களை தடுக்க, பாதுகாப்பை உறுதி செய்ய உளவுத்துறையை முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2024 தேர்தல்: 2024 லோக்சபா தேர்தல் நடக்க 1 வருடம் உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் சட்ட ரீதியாக சில பிரச்சனைகள் வரலாம். சில இடங்களில் மத மோதல்கள் கூட வரலாம். இதை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு அடிப்படையில் நம்பிக்கை அளிக்க கூடிய நபர் தேவை.
முக்கியமாக கோவை கார் வெடிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க நம்பிக்கை அளிக்க கூடிய ஒருவர் தேவை. உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டியிடம் அந்த நம்பிக்கை ஸ்டாலினுக்கு இல்லை.
இதையடுத்தே சட்ட ஒழுங்கு - 2024 தேர்தல் ஆபரேஷனை மனதில் வைத்து அமுதாவை ஸ்டாலின் களமிறக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications