சீனியர்களை கடைசிவரை சீட் நுனியில் வைத்திருந்த ஸ்டாலின்! கடைசியில் எதிர்பாரா முடிவு! இப்படி ஆகிடுச்சே
சென்னை: நேற்று தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் பல சுவாரசியமான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே தமிழ்நாடு அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் அவரின் பதவி பறிக்கப்பட்டது. 471 நாட்களுக்கு பின் அவர் சிறையில் இருந்து பெயிலில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். இத்தனை நாட்கள் செந்தில் பாலாஜி வருகைக்காக முதல்வர் ஸ்டாலின் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவை மாற்றம் வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சமீபகாலமாக கட்சி மூத்த நிர்வாகிகளிடம் சொல்லி வந்துள்ளார். அவரது ரிலீசுக்காகத்தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வும் தள்ளிப்போனது. செந்தில் பாலாஜி வரட்டும். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம் என்று தாமதம் செய்ததாக கூறப்பட்டது. செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். அவர் வருகைக்காகவே ஸ்டாலின் காத்து இருந்தார் என்று கூறப்பட்டது. அவர் வந்த நிலையில்.. அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சரவை மாற்றம்: நேற்று அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இலாக்கா என்ன?: செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சர்களாக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
சுவாரசிய முடிவு; நேற்று தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் பல சுவாரசியமான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் நேற்று ஒரே ஒரு சீனியர்.. பொன்முடியின் இலாக்கா மட்டுமே மாற்றப்பட்டது. அதாவது அவரின் உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு நேற்று அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆனால் சீனியர்கள் யாரும் நேற்று பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. சீனியர்கள் எல்லோரும் அதே அமைச்சரவை பொறுப்பில் நீடிக்கின்றனர். சீனியர்களை கடைசி வரை சீட் நுனியில் வைத்திருந்த ஸ்டாலின் யார் மீதும் ஆக்சன் எடுக்கவில்லை. முக்கியமாக துரைமுருகன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் சீனியர் vs ஜூனியர் மோதலில் சிக்கினர். ஆனால் யார் மீதும் ஆக்சன் எடுக்காமல் நேற்று ஒரே ஒரு சீனியர்.. பொன்முடியின் இலாக்கா மட்டுமே மாற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications