பீட்டர் அல்போன்ஸின் முக்கிய பதவி நீட்டிக்கப்படாதது ஏன்? ஸ்டாலினுக்கு க்ளோசாச்சே! இப்படி ஒரு காரணமா
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக இருந்த காங்கிரசின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்சின் மூன்றாண்டு பதவி காலம் ஜூலை 27-ந்தேதி முடிந்ததையொட்டி, ஆணையத்தின் புதிய தலைவராக பாதிரியார் ஜோ அருண் என்பவரை நியமித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சி மீதுள்ள கோபத்தால் தான் பீட்டருக்கு மீண்டும் வாய்ப்புத்தரப்படவில்லை என்கிற விமர்சனங்கள் எதிரொலித்தன. ஆனால் இதற்கு பின் வேறு காரணங்கள் உள்ளதாம்.
2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, காங்கிரஸ் கட்சிக்கான பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில் அல்லாமல், தனது நண்பர், திமுக ஆதரவாளர், திமுக மீது அதீத பற்றாளர் என்கிற அடிப்படையில் பீட்டருக்கு ஆணையத்தின் தலைவர் பதவியை வழங்கினார் ஸ்டாலின்.

இந்த நிலையில் அவரது பதவி காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி மீதுள்ள கோபத்தால் தான் பீட்டருக்கு மீண்டும் வாய்ப்புத்தரப்படவில்லை என்கிற விமர்சனங்கள் எதிரொலித்தன.
மோதல்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் , நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது
'நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?' தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை; தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது; கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.
பதிலடி: இதற்கு பதிலடி கொடுத்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுக.. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது.. எதிரியை ஒழிக்காமல், எப்படி அந்த இடத்தை பிடிப்பீர்கள் என்று யோசியுங்கள்; ஆசை இருக்கலாம், பேராசைக் கூடாது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்தார்.
கார்த்தி சிதம்பரம்: அது போல் புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் ஒரு விஷயத்தை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவர் பேசுகையில், நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் என்பதை மறுக்க முடியாது. அதை நாம் ஏற்க வேண்டும். அதே சமயத்தில் கூட்டணி கட்சி என்ற முறையில் நமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. நமது வாக்கு வங்கி என்பது குறைந்துவிட்டது என்பதையும் மறுக்க மாட்டேன், என்றெல்லாம் விமர்சனம் வைத்தார்.
ஏன் பதவி நீட்டிப்பு இல்லை: காங்கிரஸ் கட்சி மீதுள்ள கோபத்தால் தான் பீட்டருக்கு மீண்டும் வாய்ப்புத்தரப்படவில்லை என்கிற விமர்சனங்கள் எதிரொலித்தன.நிலையில், பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் இது குறித்து விசாரித்தபோது, பீட்டர் அல்ஃபோன்ஸ்சுக்கு கொடுக்கப்பட்ட பதவிக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை.
அது, ஸ்டாலினுக்கும் பீட்டருக்குமான நட்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது. தற்போது, அவருக்கு மீண்டும் 3 ஆண்டு காலம் பதவியை நீட்டிக்கவே வாய்ப்பு இருந்தது. ஆனால், அதனை பீட்டர் அல்ஃபோன்ஸ் விரும்பவில்லை. வேறு ஒரு பொறுப்பு மாற்றித் தர முடியுமா என முதல்வரிடம் (ஸ்டாலின்) ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு முதல்வரும் ஆகட்டும் பார்க்கலாம் என சொல்லியிருக்கிறார்.
அதனால் தான் அவரது பதவி காலம் நீட்டிக்கப்படவில்லை. அதேசமயம், பீட்டருக்கு எந்த பதவியை ஒதுக்கலாம் என ஆராயப்பட்டுள்ளது. அதனால், அரசு பதவிகளில் ஒன்றில் விரைவில் அவர் உட்கார வைக்கப்படுவார் என்கிறார்கள் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications