"ராவணன்".. சந்திர சேகருக்காக களமிறங்கிய ஸ்டாலின்.. வந்ததே கோபம்.. யாருங்க இவர்? பின்னணி என்ன?
சென்னை: பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தில், உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டிக்க வேண்டும். இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார்.
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீதான தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் இப்படி கோபத்துடன் போஸ்ட் செய்து இருப்பது கவனம் பெற்றுள்ளது. ஸ்டாலினின் இந்த போஸ்ட் காரணமாக உத்தர பிரதேசத்தில் முக்கிய தலித் தலைவராக இருக்கும் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தமிழ்நாட்டிலும் கவனம் பெற்றுள்ளார். யார் இவர்?

யார் இவர்?: தமிழ்நாட்டில் ராவண வழிபாடு என்பதெல்லாம் சாதாரண விஷயம்.. இப்போதும் கூட தங்களை ராவணர்களின் வாரிசு என்று அழைக்கும் மக்களும்.. அவரை ஒரு rebel leader ஆகவும் பார்க்கும் தமிழர்கள் பல கோடி பேர் உள்ளனர். ஆனால் இதே ராவண கோஷத்தை ஒரு அரசியல் தலைவர் வடநாட்டில் எழுப்புகிறார் என்றால் நம்ப முடியுமா?.. அதிலும் உத்தர பிரதேசத்தில் ஒருவர் ராவண கோஷம் என்று எழுப்புகிறார்.. அதை பல லட்சம் பேர் பாராட்டுகிறார்கள் என்றால் நம்ப முடியுமா?
உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் பலரால்.. சிறுபான்மையினர் பலரால் ராவணா என்று அழைக்கப்படும் நபர்தான் பீம் ஆர்மி சந்திர சேகர் ஆசாத். 1986ல் உத்தர பிரதேசத்தில் பிறந்த இவர், மிக தீவிரமான அம்பேத்கார் பின்தொடர்ப்பாளர்.
உத்தர பிரதேசத்தில் தலித் - ராஜ்பூட் மக்கள் அதிகம் வாழ்ந்த கிராமத்தில் பிறந்த இவர் தலித் மக்கள் படும் அவதிகளை கண்டு பீம் அம்பேத்காரின் கொள்கையை படிக்க தொடங்கினார். இதனால் ஈர்க்கப்பட்ட அவர் சட்டம் படித்து வக்கீலும் ஆனார். தனது மாவட்டத்திலும் அண்டை மாவட்டங்களிலும் தலித் மக்களுக்காக சட்ட போராட்டம் நடத்தியவர் ராஜ்பூட் போன்ற ஆதிக்க ஜாதியினர் தலித் மக்களுக்கு செய்த கொடுமைகளை பார்த்து கொதித்தெழுந்தார்.
பீம் ஆர்மி: தொடக்கத்தில் சட்ட ரீதியாக தலித் மக்களுக்கு உதவியவர் அதன்பின் அமைப்பு ரீதியாக போராட முடிவு செய்தார். தன்னுடன் சட்ட போராட்டம் நடத்திய ஒருமித்த கொள்கை கொண்ட பலரை ஒன்று இணைத்தார். இதன் மூலம் இவர் உருவாக்கியதுதான் பீம் ஆர்மி. அதாவது அம்பேத்கர் ஆர்மி. சந்திரசேகர் ஆசாத், சதிஷ் குமார், வினய் ரத்தன் சிங் ஆகியோர் இணைந்து 2014ல் பீம் ஆர்மியை உருவாக்கினார்கள். இதில் தற்போது 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தலித் மக்களுக்காக சட்ட போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
பீம் ஆர்மி போராட்டம்: தலித் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் வரும் போதெல்லாம் இவர்தான் முதலில் களத்தில் நிற்பார். தலித் மக்களுக்கு இலவச பள்ளிக்கூடம் கட்டுவது, படிப்பகம் கட்டுவது என்று இவர் பணிகளை செய்து வருகிறார். சிஏஏ போராட்டங்களின் போது 4 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டார். ஒரு வழக்கில் வெளியே வந்தால்.. சிறை வாசலிலேயே இன்னொரு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். அப்போதுதான் இவருக்கும் யோகி ஆதித்யநாத் அரசுக்கும் இடையிலான பெரும் மோதல் ஏற்பட்டது.
ஆதித்யநாத்: முறுக்கிய மீசையோடு தமிழர் தோற்றத்தில் இருக்கும் இவர் அங்கு தலித் அரசியலை மாயாவதிக்கு பின் மீண்டும் முன்னெடுக்கும் தலைவராக பார்க்கப்படுகிறார். இவரின் பின்தொடர்பாளர்கள் எல்லாம் இவரை ராவணன் என்று அழைக்கிறார்கள். 2016ல் இருந்து இவர் 13 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்பூட் மக்களுக்கு எதிராக இவர் செய்த போராட்டம் உத்தர பிரதேசத்தில் இப்போது மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. சிஏஏவிற்கு எதிராக கடந்த 2021ம் வருடம் டிசம்பர் 21ல் இவர் நடத்திய போராட்டத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். தலித் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் முதலில் நிற்கும் இவர் உத்தர பிரதேசத்தில் மாற்று அரசியலை முன்னெடுக்க தொடங்கி உள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications