"ஆடு" இருக்கே.. அதை ஒருத்தரும் "தொட" முடியாது.. அண்ணாமலையை சட்டென லியோனி இப்படி சொல்லிட்டாரே.. ஏன்?
லியோனி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்
சென்னை: இதுவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, இந்த அளவுக்கு யாராவது விமர்சித்திருப்பார்களா தெரியாது.. திமுகவின் லியோனி ஒரே பேட்டியில், அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, பலமுறை தமிழக பாஜகவை விமர்சித்துள்ளார்.. சில தினங்களுக்கு முன்புகூட, "அரைவேக்காட்டு அரசியல் தலைவர் ஒருவர் என்னுடைய தலைவர் சமூகநீதியை கடைபிடிக்கவில்லை என்று சொல்லி வருகிறார். அரை போதை அரசியல் தலைவர் அவர் " என்று கடுமையாக சாடியிருந்தார்.
அந்தவகையில் நேற்றுகூட பாஜகவை சீண்டி பேசியிருந்தார்.. கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூரில் நடைபெற்றது.

மாட்டு வண்டி
அப்போது லியோனி பேசியதாவது: "பாஜக மக்களை தங்கள் மீது திசை திருப்ப முயன்று வருகிறது.. அண்ணாமலை அதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.. அதற்காகவே என்னென்னமோ பேசி வருகிறார். அதிமுகவில் நாடகம் போடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.. எப்படி இருந்தாலும் அது இரட்டை மாட்டு வண்டி.. ஆனால் 2 மாடுகளும் சகிக்க முடியாத மாடுகள்.. மரணத்தை நோக்கி போய்கொண்டிருக்கிற 2 மாடுகள் அமர்ந்திருக்கிற வண்டிதான் அதிமுக..

நொறுங்கும் தலைமை
எனவே, அதில் தொடர்ந்து பயணிப்பது வாய்ப்பில்லை.. தலைமைக்கு என்றைக்கு போட்டி என்று வந்துவிட்டதோ, அந்த இயக்கம் தரைமட்டமாகிவிடும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி உள்ளார்.. அதுபோல, தலைமைக்கு போட்டி என்று வந்துவிட்டால், அந்த இயக்கத்தின் தொண்டர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.. அந்தநிலைமைதான் அதிமுகவுக்கும்.

கோயில் ஆடு
மரியாதைக்குரிய பாஜகவின் தலைவர் அண்ணாமலை., கோயிலுக்கு நேந்துவிட்ட ஆடு மாதிரி.. அந்த ஆடு எப்படி தெரியுமா? வேணும்கிற இடத்துல எல்லாம் சாப்பிடும்.. ஆனால் யாருமே அதை அடிக்க மாட்டாங்க.. அதை தொடவும் மாட்டாங்க,.. அது நெல்லை சாப்பிட்டால்கூட, 'ஐயோ, அது கோயில்ஆடு, விட்டுருப்பா, ஒன்னும் செய்யாதே"ன்னு சொல்லுவாங்க.. அப்படியே வளர்த்து விட்டுட்டே இருப்பாங்க.. கோயில் ஆட்டை பார்த்துட்டு, வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாடு, இந்த கோயில் ஆட்டுக்கு கிடைச்ச சுகம்கூட நமக்கு கிடைக்கலியேன்னு ஏக்கமாக பார்த்துட்டே இருந்துச்சு.

மேளதாளம் சத்தம்
ஆனால் ஒருநாள் திடீர்னு மேளதாளம் சத்தம் கேட்டுச்சு.. அப்போ அந்த கோயில் ஆட்டை மாலை போட்டு அழைச்சிட்டு போனாங்க.. எதுக்கு தெரியுமா? அதை பலிகடாவாக வெட்டுவதற்கு.. அதுமாதிரி பாஜகவின் தலைவர் அண்ணாமலை, பொழுதுபோகாமல், ஏதோ நாலைந்து பேப்பர்களை வைத்து கொண்டு, திமுக மீது குற்றம் சாட்டுகிறார்.. ஆனால் அது எதுவுமே பலிக்கல.. அதனால் வேறு அஸ்திரங்களை எடுத்து வருகிறார்.. அதற்காகவே மேடை போட்டு பேசியும் வருகிறார்.

ரிப்போர்ட் - ஆதாரம்
அவர் ஆதாரமற்ற பேச்சுக்கு சுத்தமா தமிழ்நாட்டில் மரியாதையே இல்லை.. அவரது கூட்டணி கட்சியே அவர் பேச்சைஏற்றுக் கொள்ளவும் இல்லை.. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் போன்றோர் உடனடியாக அண்ணாமலை பேச்சை கண்டித்தனர்.. அதிமுகவின் செங்கோட்டை, இனிமேலும் திராவிட கட்சிகள்தான் தமிழகத்தை ஆளும் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.. இதுவே போதும் அண்ணாமலைக்கு.. அதனால் பாஜகவின் பாட்சா இந்த தமிழ்நாட்டில் என்னைக்குமே பலிக்காது" என்றார்.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications