யு.எஸ் போன நேரம் பார்த்து ஆப்சென்ட்.. சிங்கப்பூர் போன துரைமுருகன்.. விசாரித்த ஸ்டாலின்! என்ன காரணம்?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்திற்கு இடையே மூத்த அமைச்சர் துரைமுருகன் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பயணம் ஏன் என்ற விவாதம் திமுகவினர் இடையே எழுந்துள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பேன். என் முழு கவனமும் தமிழத்தில்தான் இருக்கும். அதேபோல, உங்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்காணித்தபடி இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்; கவனமாக இருங்கள் என்றெல்லாம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை எச்சரித்தார் ஸ்டாலின்.

இதுகுறித்து மாநில உளவுத்துறைக்கும் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், தமிழகத்தில் நடக்கும் அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் உள்ள முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது உளவுத்துறை. உயரதிகாரிகளிடம் நேற்று பேசிய முதல்வர் தரப்பு, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார்கள் ? என்ன செய்கிறார்கள் ? என விசாரித்துள்ளது.
துரைமுருகன்: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்திற்கு இடையே மூத்த அமைச்சர் துரைமுருகன் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பயணம் ஏன் என்ற விவாதம் திமுகவினர் இடையே எழுந்துள்ளது.
ஸ்டாலினிடம், அமைச்சர்களின் தினசரி செயல்பாடுகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனை பற்றி ஸ்பெஷலாக கேட்டிருக்கிறது மேலிடம். அப்போது, முதல்வரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த கையோடு காட்பாடி சென்றவர் அங்குதான் இருந்தார். அதன்பின் சிங்கப்பூர் சென்றார்.
இதை பற்றி திமுகவினர் அளித்த விளக்கத்தில், துரைமுருகன் வருடம் ஒரு முறை சிங்கப்பூருக்கு இதய சோதனை செய்ய செல்வார். அப்படிதான் சென்றுள்ளார். பொதுவாக ஆகஸ்ட் மாதம் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை கலைஞர் நாணய வெளியீடு தொடங்கி பல நிகழ்வுகள் நடந்ததால் அவரால் செல்ல முடியவில்லை. அதனால் இப்போது சென்றுள்ளார் என்று திமுக தரப்பினர் விளக்கம் அளித்துள்ளார்.
யார் அதிகாரம்: முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அமைச்சரவை மாற்றம் இல்லை: சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாற்றம்தான் செய்யப்படவில்லை.
ஆட்சி அதிகாரம்: இதனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில்.. இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது.
ஆனாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பார் . நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார்.. இந்த பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications