"ஆம்பள".. இதுதானா ஆண்மை திமிர்.. எடப்பாடியா இப்படி பேசியது.. மல்லுக்கட்டும் திமுக.. தகிக்கும் இணையம்
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் பதிவாகி உள்ளன.
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சார களத்தில், எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திய தடித்த வார்த்தைகள் குறித்த அதிர்வுகள் இன்னமும் அடங்கவில்லை.. சோஷியல் மீடியாவில் இதுகுறித்த விவாதங்களும் வெடித்துகிளம்பி உள்ளன.
வரப்போகும் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி வருகை தந்திருந்தார்.. அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்.. நேரடியாகவும், துணிச்சலாகவும் எதிர்தரப்பினரை கேள்விகளால் துளைக்க கூடியவர்..

பச்சை பச்சோந்தி
செய்தியாளர்கள் சந்திப்பு என்றாலும்கூட, தன் ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர். ஓபிஎஸ் பற்றின கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, பலசமயம், அதை இயல்பாக பேசினாலும், சில சமயம், "பச்சோந்தி", "மோசமானவர்", "தரம்தாழ்ந்தவர்" போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி ஓபிஎஸ்ஸை விமர்சித்ததையும் மறுக்கமுடியாது.. ஆனால், முதல்வராக பதவியேற்றபோதும்சரி, எதிர்க்கட்சியாக பதவியில் உள்ளபோதும்சரி, இத்தனை வருட காலத்தில் திமுகவை தடித்த வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது கிடையாது.. ஆனால், ஈரோடு பிரச்சாரத்தில் 2 நாட்களுக்கு முன்பு பேசிய வார்த்தைகளின் எதிரொலி இன்னமும் அடங்கவில்லை..

மீசை வச்ச ஆம்பள
"நீ சரியான ஆம்பளையா இருந்தால்.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தால்.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தால்.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி.. உங்களுக்கு திராணி கிடையாது. தெம்பு கிடையாது.. அதிமுகவை நேரடியாக சந்திக்கும் திறமை கிடையாது. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி... ஏழைக்கு நீ காசு கொடுத்து கூட்டி வந்து தங்க வைத்திருக்கிறாயே, அவர்களை வைத்து வாக்கு போட சொல்கிறாயே.. அதிமுகவை எதிர்க்கும் திறன் உங்களுக்கு ஏன் இல்லை" என்று பொதுமக்கள் முன்னிலையில், பிரச்சாரத்தில் கேட்டிருந்தார்.

ஆண்மையின் திமிர்
இந்த விவகாரத்தின் காட்டமும், அதிர்ச்சியும் இன்னும் அரசியல் களத்தை விட்டு நீங்கவில்லை.. முதல்நபராக திமுக எம்பி கனிமொழி கொந்தளித்தார்.. "வேஷ்டி கட்டுறியா, மீசை இருக்கா, ஆம்பளையா என்கிறாரே. ஆண்மையின் திமிர் அழிய வேண்டும் என்று சொன்ன பெரியாரின் மண்ணில் நின்று கொண்டு, ஆம்பளையா பொம்பளையா என்று கேட்கிறார். பல ஆண்டுகளாக ஒரு அம்மையாரின் காலில் விழுந்து எழுந்திருக்கிறார். அவர்கள் என்ன மீசை வைத்திருந்தார்களா அல்லது வேஷ்டி கட்டியிருந்தார்களா? பதவி என்று சொன்னவுடன் ஒரு அம்மையாரின் காலில் விழுந்தார். பின்னர் அவர்களின் முதிலேயே குத்தினார். இதுதான் ஆண்மையா? இதுதான் மனிதமா? நீங்கள் வீரம், தைரியம் பற்றி பேசுகிறீர்கள்" என்றெல்லாம் கேட்டிருந்தார்.

பாதங்களை கழுவி குடிக்கிறார்
எம்பி ராசா பேசும்போது, "ஆயிரம் முறை அம்மா என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அவரை போல் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார். அதிமுகவை எதிர்க்க திமுகவுக்கு திராணியில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் மோடியை எதிர்த்து பதில் கூறிவிட்டு நிற்பவன் இந்த ஆ.ராசா. சாதாரண தொண்டனான நான் எடப்பாடி பழனிசாமி கும்பிடும் மோடியை எதிர்க்கிறேன். உங்களை எதிர்ப்பதற்கு எங்களுக்கு என்ன பயமா? நரேந்திர மோடியின் பாதங்களை கழுவி குடிக்கும் எடப்பாடி பழனிசாமி எங்களை பார்த்து தைரியமில்லை என்கிறார் என்று ஆவேசமாக விமர்சித்திருந்தார்.

டைரக்டர் நவீன்
தலைவர்கள் இப்படி எதிர்வினையாற்றி வரும் நிலையில், ஆணின் அடையாளம் எது? என சோஷியல் மீடியாவில் இந்த விவகாரம் இப்போது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. எதிர்ப்பு, ஆதரவு என்று கமெண்ட்கள் குவிய தொடங்கி உள்ளன.. இயக்குநர் நவீன் ட்விட்டரில், "ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த ஸ்டிரியோ (stereotype) வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவுபடுத்தும் செயல்" என்றார்.

அப்சரா ரெட்டி
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, "இந்திரா காந்தி பற்றி கருணாநிதி என்ன சொன்னார்? எங்கள் கட்சிக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். திமுகவில் பெண்கள் முதலமைச்சரின் காரில் தொங்குகிறார்கள் அல்லது ராஜா போன்ற மூத்தவர்களால் விபச்சாரிகள் என்று அவமதிக்கப்படுகிறார்கள். எனவே உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்" என்று நவீனுக்கு பதிலடி தந்திருந்தார்.. இதனிடையே உண்மையிலேயே எடப்பாடி ஏன் அப்படி பேசினார்? என்று அதிமுக நிர்வாகிகள் தரப்பில் சில காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன.

கறிக்கடைகள்
தொகுதிக்குள் திமுக தரப்பில் பணம் தரப்படுகிறது..வீடுகளுக்கு 1 லிட்டர் பால், காய்கறி தொகுப்பு, சிக்கன் அல்லது மட்டன், சில்வர் குடம், பெரிய பாத்திரம், பை இப்படி எல்லா பரிமாற்றமும் நடக்கிறது.. முக்கியமாக அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினர் அந்த பகுதிக்கு பிரசாரத்துக்கு வரும்போது, அங்கு கூட்டம் கூடக்கூடாது என்பதற்காகவே, ஒரு மணி நேரத்துக்கு முன்பு, வீடு வீடாக சென்று அவர்களை பணிமனைக்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள்.. இதற்கு பணமும் உண்டு.. கடந்த, 15, 16, 17ல் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு மாலை, 5:00 மணிக்கு மேல் வந்தார்.. உடனே திமுக நிர்வாகிகள் களத்தில் குதித்துவிட்டனர்.

கட்சிக்களம்
அங்கிருந்து எடப்பாடி கடந்து செல்லும்வரை யாரும் விடுவிக்கப்படவில்லை.. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஓட்டு குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே, போட்டி போட்டு பணத்தை தரவும் அமைச்சர்கள் தரப்பில் வேலை நடக்கிறது என்று பொருமித் தள்ளுகிறார்கள். ஆனால், அதிமுக தரப்பில் தொடர்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை திமுகவும் கூட்டணி கட்சிகளம் மறுத்து வருகின்றன.. இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரியும் விளக்கம் சொல்லி இருந்தார்..

சிறைபிடிப்பு
"மக்களை சிறை பிடித்ததாக இல்லாத குற்றச்சாட்டை பரப்புகின்றனர்.. தோல்வி பயத்தில் அதிமுக குற்றம்சாட்டுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்குதான் பணபலம் அதிகம் இருக்கிறது. ஆனால், அவர்கள் தொண்டர்களே அவர்களது கூட்டங்களுக்கு செல்லவில்லை. அதுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? அதிமுகவின் கூட்டணி கட்சியினரும் பணியாற்ற தயாராக இல்லை. பணம் கொடுப்பதால் மட்டுமே யாரும் வாக்கு செலுத்தி விடமாட்டார்கள். மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

யார் ஆம்பள
எடப்பாடி பழனிச்சாமி கேட்ட அதே கேள்வியை நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகிவிடும்? கட்சியின் லட்சியத்தையும் கொள்கையையும்தான் பேச வேண்டும். ஆம்பளையா என்று கேள்வி கேட்கவா அவர் கட்சியின் தலைவராக இருக்கிறார்? தமிழக முதல்வர் ஸ்டாலினோ அல்லது ராகுல் காந்தியோ எங்கேயாவது மண்டியிட்டு பார்த்திருக்கிறீர்களா? இதிலிருந்து யார் ஆம்பளை என்று தெரிந்துவிடும்" என்று காட்டமான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். எனினும், எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த அதிர்வலைகள் இன்னமும் சோஷியல் மீடியாவில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications