டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!
சென்னை: அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ரெடியா வைத்திருக் கிறார் எடப்பாடி பழனிச்சாமி. திமுக அறிவிக்கவிருக்கும் தொகுதிகளின் பட்டியலை பார்த்து அதற்கேற்ப அதிமுகவின் வேட்பாளர் லிஸ்ட்டை அறிவிக்க முடிவு செய்திருப்பதாக அதிமுக தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட்டை ஒரு புது விதமாக எடப்பாடி தயாரித்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்கின்றனர். அதாவது, இந்த முறை தொகுதிக்கு 3 பேர் என அதிமுக மா.செ.க்களிடமிருந்து ஒரு லிஸ்ட்டை வாங்கியிருக்கிறார் எடப்பாடி. அது மட்டுமல்லாமல், எடப்பாடி ஒரு உளவுத்துறை வைத்திருக்கிறார். அதில், இவரது ஆட்சியின் போது கோலோச்சி ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் சிலர் உட்பட 12 பேர் இருக்கின்றனர். அவர்கள், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொகுதிக்கு 3 பேரை செலக்ட் பண்ணிக் கொடுத்துள்ளனர்.

இவர்கள் தந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் யாரும் அதிமுக மா.செ.க்களுக்கு வேண்டப்பட்டவர்களோ, நெருக்கமானவர்களோ கிடையாது. முழுக்க முழுக்க கட்சிக்காக உழைத்தவர்களும் எடப்பாடியின் நேரடி விசுவாசிகளுமாக டெஹெர்வு செய்து அவர்களில் யாருக்கு தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட பட்டியல் அது.
இதற்கு காரணம், மா.செ.க்கள் சிபாரிசு செய்துள்ள அவர்களின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுத்து அவர்கள் ஜெயித்து விட்டால், அவர்கள் சம்மந்தப்பட்ட மா.செ. க்களின் பிடியில் தான் இருப்பார்கள். நமக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க மாட்டா ர்கள் என நினைத்தே தனது விசுவாசிகள் கொண்ட பட்டியலை தயாரிக்கச் சொல்லி யிருந்தார்.
அந்த வகையில், எடப்பாடியின் உளவுத் தரப்பினர் கொடுத்த தொகுதிக்கு 3 பேர் லிஸ்ட்டிலிருந்து 2 பேரை தேர்வு செய்து வைத்திருக்கிறார். அதேபோல, மா.செ.க்கள் சிபாரிசு செய்த பட்டியலிருந்து 1 நபரை தேர்வு செய்திருக்கிறார். ஆக, ஒரு தொகுதி க்கு 3 நபர் கொண்ட பட்டியல் அவர் வசம் உள்ளது. முதல் 2 இடத்தில் எடப்பாடியின் விசுவாசிகள் இருக்கிறார்கள்.
அதனால், திமுக தனது கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளையும், திமுக போட்டியிடவுள்ள தொகுதிகளையும் கவனித்து அதற்கு சூட்டபிளான வேட்பாளரை அறிவிக்கவிருக்கிறார் எடப்பாடி. அதாவது, திமுக போட்டியிடும் தொகுதியில் அக்கட்சியை எதிர்க்க ஒரு அளவுகோலும், திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சியை எதிர்க்க ஒரு அளவு கோலும் வைத்து வேட்பாளரை டிக் அடிக்கவிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
முன்பெல்லாம் அதிமுகவின் வேட்பாளர் தேர்வில் சீனியர்களின் கருத்துக்களைக் கேட்டு அதற்கேற்ப பட்டியல் ரிலீஸ் செய்யப்படும். இந்த முறை, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் யாருக்கு எந்த தொகுதி என்பதை பார்த்து வேட்பாளர்களை டிக் அடிக்கு நூதன முறையை அவர் கையாள நினைப்பது... தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழல்களுக்காக என்று எடப்பாடியின் திட்டத்தை விவரிக்கிறார்கள்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறியாக இருப்பதால், மனுத்தாக்கல் தொடக்க நாளான 30-ந்தேதி வரை திமுகவில் முடிவெடுக் காமல் இருந்தால் அது வரையிலும் நாம் காத்திருக்க வேண்டுமா? நீங்கள் பிரச்சாரத்தைத் துவக்கி விட்டதால் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை இப்போதே ரிலீஸ் செய்திடலாமே? என்று சீனியர்கள் வலியுறுத்துவதால், திமுக தரப்பில் எப்போது தொகுதிகளின் லிஸ்ட் ரிலீசாகும் ? என திமுகவில் உள்ள தனது நட்பு வட்டாரங்களை தொடர்பு கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
- சிறப்பு நிருபர் எழில்
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications