ஆட்டமே முடிஞ்சிடும்.. எடப்பாடிக்கு போன வார்னிங்! இதோ கிளம்பி வரேன்.. சட்டென காரை எடுத்து.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்தது ஏன்? அதற்கு பின் நடந்தது என்ன? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு அரசியல் மீண்டும் சூடு பிடித்து உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் அடுத்த வாரம் மீண்டும் விசாரணை தொடங்க உள்ளது.

இந்த விசாரணை வேகமாக நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவில் இந்த முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

இந்த பொதுக்குழு செல்லுமா, செல்லாதா என்றுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

 அதிமுக கட்டுப்பாடு

அதிமுக கட்டுப்பாடு

இந்த வழக்கு முடியும் முன் முடிந்த அளவு நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் முயன்று வருகின்றனர். அதோடு டெல்லி பாஜகவின் சப்போர்ட்டையும் பெறுவதற்கு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காகவே திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தீவிரமாக முயன்றனர். ஆனால் பிரதமர் மோடி இரண்டு பேரையும் தனியாக சந்திக்க மறுத்துவிட்டார்.

சேர்ந்து வாங்க

சேர்ந்து வாங்க

மாறாக இரண்டு பேரும் ஒன்றாக வாருங்கள்.. விமான நிலையத்தில் வரவேற்க, வழியனுப்ப மட்டுமே அனுமதி. தனியாக சந்திக்க அனுமதி கிடையாது என்று பிரதமர் அலுவலகம் சார்பாக உறுதியாக சொல்லிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. உங்களை டெல்லி ஒற்றை தலைமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. உங்களையும், ஓ பன்னீர்செல்வத்தையும் ஒரே குடையின் கீழ் வைத்துதான் டெல்லி பார்க்கிறது என்று எடப்பாடி ஆதரவாளர்கள் இதை பற்றி அவரிடம் சொல்லி இருக்கின்றனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த சம்பவம் காரணமாக எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கிறாராம். இதனால்தான் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தீவிரமாக அரசியல் பணிகளை செய்ய முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். எதிர்காலத்தில் பாஜகவை கழற்றிவிட வேண்டிய சூழல் வரலாம். அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்றால் பாஜகவை கழற்றிவிட வேண்டிய நிலை கூட ஏற்படலாம். அதற்கு தொண்டர்கள் ஆதரவு வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டம் போட்டு வருகிறாராம்.

அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்களை மொத்தமாக கவர வேண்டும் என்றால் திமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டும். திமுகவை ஓபிஎஸ் கடுமையாக எதிர்க்காத நிலையில் நாம் எதிர்த்தால்தான் தொண்டர்கள் நம் பக்கம் வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம். அவருக்கு நெருக்கமான சிலரும்.. அண்ணே.. நாம் திமுகவை எதிர்ப்பதில் சுணக்கம் கண்டுவிட்டோம். அண்ணாமலை எல்லாம் வேகமாக செயல்படுகிறார். நாமும் செயல்பட வேண்டும். இல்லையென்றால் நம் அரசியலுக்கே சிக்கலாகிவிடும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்களாம்.

கோவையில் பார்வையிடவில்லை

கோவையில் பார்வையிடவில்லை

அதேபோல் சேலத்தில் இருந்தாலும் அருகில் இருக்கும் கோவைக்கும் அவர் செல்லவில்லை. கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை பார்வையிட அவர் செல்லவில்லை. அங்கு மக்களை சந்தித்து பேசவும் அவர் செல்லவில்லை. மாறாக அவர் சேலத்திலேயே முடங்கினார். அதிமுகவினர் இடையே இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதையடுத்தே நேற்று எடப்பாடி பழனிசாமி சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்வையிட்டு இருக்கிறார் என்கிறார்கள். சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் மழை ஏற்பட்டு சில இடங்களில் வெள்ளம் தேங்கியது. ஆனால் இதை பார்க்க எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. சேலத்தில் இருந்து கொண்டே எடப்பாடி அறிக்கை விட்டார். அவரின் செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளது. அவரின் ஆதரவு நிர்வாகிகள் சிலர்.. ஏன் அண்ணா சென்னை பக்கமே வரவில்லை என்று விமர்சனம் வைத்துள்ளனர்.

இரண்டாவது

இரண்டாவது

இரண்டாவது வாரம் மழை பெய்து சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்ட போதும் எடப்பாடி சென்னைக்கு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது மட்டும் எடப்பாடி மதுரைக்கு அவசரமாக சென்றார். இதை வைத்து கட்சிக்குள் பலரும் முணுமுணுக்க தொடங்கி உள்ளனர். எடப்பாடி சென்னைக்கு வர வேண்டும். மழை பகுதிகளை பார்வையிட வேண்டும். இல்லையென்றால் திமுகவும், பாஜகவும் ஸ்கோர் செய்து விடுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்தே, எடப்பாடி உடனே கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்து, பின்னர் சென்னையில் மழை பாதிக்கப்பட்ட சில இடங்களை பார்வையிட்டார். பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டதால் சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளை கண்டுபிடித்து அங்கு நின்று எடப்பாடி ஆய்வு செய்து இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+