நைட் முழுக்க பாய்பிரண்ட்ஸ்.. மார்கெட்டில் காய் வாங்க வந்த பெண்.. கிறங்கிய இளைஞர்.. கடைசியில் இப்டியா
மனைவியை அடித்தே கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்
சென்னை: பரிதாபப்பட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போய், கடைசியில் அந்த இளைஞர் சென்னையில் கைதாகி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஹரிஷ் பிரம்மா.. இவரது மனைவி பெயர் ரசியா கத்துனா.. இவர்கள் இருவரும் சென்னை அடுத்து அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரசியா திடீரென தவறி விழுந்ததில் தலையில் அடிப்பட்டுள்ளதாக சொல்லி, ஹரிஸ் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்... ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ரசியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சடலத்தை போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர்.. பிறகு இது குறித்து வழக்கும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் ரசியா தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.. இதையடுத்து, போலீசார் முதல்நபராக ஹரிஷை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தது..

ஆண் நண்பர்கள்
ரசியாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர்.. அவர்களுடன் தொடர்ந்து போனில் பேசிவந்துள்ளார்.. இந்த விஷயம் ஹரிஷூக்கு தெரியவந்ததையடுத்து, மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனாலும் ஆண் நண்பர்களை அவர் கைவிடவில்லை.. இது தொடர்பான சண்டை மீண்டும் வந்தபோது, ஆத்திரம் தீராமல் கீழே கிடந்த கட்டையை எடுத்து ரசியாவை தாக்கி கொன்றுள்ளார். இந்த வாக்குமூலத்தையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

காய்கறி மார்க்கெட்
உயிரிழந்த ரசியாவுக்கு 22 வயதாகிறது.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகிறது.. சொந்த மாநிலம் உபி என்றாலும், ஹரிஷ் மட்டும்தான் முதலில் சென்னையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறுபடியும் உ..பிக்கு சென்றிருக்கிறார்.. அங்கே காய்கறி கடையில் முதன்முதலாக ரசியாவை சந்தித்துள்ளார்.. ரசியா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.. அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.

பாய்பிரண்ட்ஸ்
கணவரையும் பிரிந்துள்ளார்.. அந்த கதையை கேட்டுதான் ஹரிஷுக்கு பரிதாபமும் காதலும் ஏற்பட்டுள்ளது.. அங்கேயே கல்யாணம் செய்து, இங்கே அம்பத்தூர் அழைத்து வந்துள்ளார்... தனியாக வீடு எடுத்து 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்... அப்போதுதான் ஒருநாள் யதேச்சையாக ரசியாவின் போனை பார்த்தபோது, பல ஆண்களுடன் இரவு நேரங்களிலும் நிறைய நேரமும், ரசியா பேசிவந்ததும், அவர்கள் எல்லாம் ரசியாவின் ஆண் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. கடைசியில் கொலை வரை வந்து, இப்போது ஹரிஷ் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்..!












Click it and Unblock the Notifications