நாங்குநேரி சம்பவம்.. ஜெய்பீம் ஹீரோ சந்துருவை ஸ்டாலின் தேர்வு செய்தது ஏன்? யார் இவர்?
சென்னை : நாங்குநேரி சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் சாதிய வன்முறைகளை களைய ஜெய்பீம் நாயகன் நீதியரசர் சந்துருவின் தலைமையில் ஒரு நபர் குழுவினை ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி மாணவர்களிடையே சாதிய வன்முறைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவை ஏன் ஸ்டாலின் தேர்வு செய்தார். அதற்கு ஆழமான பின்னணி காரணமாக இருக்கிறது.
நாங்குநேரி சம்பவத்தை அடுத்து பள்ளி மாணவர்களிடையே சாதி வன்முறையை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை தர ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜெய்பீம் திரைப்படத்தின் நிஜ நாயகனான ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, நீதிபதியாக இருந்த காலத்தில் 96000 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார். நீதிபதி சந்துருவை முதல்வர் ஸ்டாலின், ஏன் இந்த விஷயத்திற்கு தேர்வு செய்தார் என்பதை பார்க்க அவரது வாழ்க்கை வரலாற்றினை நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
2021ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஏற்று நடித்த கதாபாத்திரன் பெயர் சந்துரு.. இந்த கதாபாத்திரத்தின் நிஜ நாயகன் தான் நீதியரசர் கே. சந்தரு. பொதுவாக மக்களுக்காக போராடுபவர்கள் வெளிச்சத்திற்கு வர விரும்ப மாட்டார்கள்.. அப்படித்தான் அவரும் இருந்தார். திருச்சி மாவட்டத்தில் ரயில்வே குமாஸ்தாவின் மகனாக பிறந்து வக்கீல் ஆகி பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகி பெரும் புரட்சி செய்தவர் சந்துரு. சென்னையில் படித்து வளர்ந்த அவருக்கு, என்சிசி போன்ற அமைப்புகளில் சேர்ந்த பின்னரே கிராமங்களை பற்றி தெரியவந்துள்ளது.
அப்போதே அவருக்குள் போராட்ட குணம் இருந்துள்ளது. ஸ்டூண்ட் சோசியலிஸ்ட் போரம் என்ற அமைப்பினை நிறுவி கல்லூரி மற்றும் வெளியில் பல பிரச்சாரங்களை மக்களுக்காக செய்து வந்துள்ளார். உதயகுமார் என்ற மாணவனின் உடல் தண்ணீர் தொட்டியில் மிதந்தது தொடர்பான விசாணையில் உண்மைக்கான ஆதாரத்தையும் , சாட்சியையும் ஒப்படைத்தார் சந்துரு. அந்த வழக்கில் அரசை எதிர்த்து போராட வேண்டியதிருந்தால், அவருக்கு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
1979இல் வழக்கறிஞர் ஆகி இருக்கிறார். தன்னுடைய நீதிமன்ற பணியை உயர்நீதிமன்றத்தில் இருந்து தொடங்கினார். சிபிஎம் அமைப்பில் இருந்த அவர், வழக்கறிஞர் பணி ஒரு பக்கம், தொழிற்சங்கங்களுக்கான பணி ஒருபக்கம் என செய்து வந்துள்ளார். 1997ல் உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஆன சந்துரு , 2006ம் ஆண்டு நீதிபதியானார்.. அதன்பின்னர் பல வழக்குகளில் முன்னுதாரணம் ஆன தீர்ப்புகளை வழங்கினார்.
கடந்த மார்ச் 8, 2013ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. அன்று ஓய்வு பெற்ற நீதிபதி கே சந்துரு.. மக்கள் வரிபணத்தில் தனக்காக ஏற்பாடு செய்த பாராட்டு விழா வீண் செலவு என்று மறுத்தார். சரி விழா வேண்டாம். கார் வரை வந்து வழியனுப்புகிறோம் என்று அனைவரும் காத்திருக்க, அவரோ நடந்தே வாயிலுக்கு செல்கிறார்.. பதறிய ஊழியர்கள் என்ன என்று ஓடிப்போய் கேட்க, நான் தான் ரிட்டயர்டு ஆகிட்டேன்ல.. இனி எதுக்கு அரசு கார்.. இருக்கவே இருக்கு மின்சார ரயில் என்று புறப்பட்டு சென்றார். அதுதான் அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தி.
உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது நீதியரசர் சந்துரு தன்னை நீதிபதி என்றே அழையுங்கள். மை லார்ட் என்று அழைக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டவர். கோயிலுக்குள் பெண் கடவுள் இருக்கும் போது, பெண் பூசாரி ஏன் இருக்ககூடாது என்று அவர் அளித்த தீர்ப்பு பல்லாண்டு வரலாற்றின் மீதான சாட்டை அடி ஆகும். தனி சுடுகாடு வேண்டும் என்று இவர் அளித்த தீர்ப்பால், இப்போது தமிழக சுடுகாடுகளில் சமரசம் நிலவுகிறது.
கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு வழிபாட்டு உரிமை, மாட்டு இறைச்சி கடைகள் நடத்த தடையை நீக்கிய தீர்ப்பு, பஞ்சமி நிலங்களை ஆதிக்க சமூகத்திடம் இருந்து மீட்டு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க ஆணை பிறப்பித்தது என இப்படி நீதிபதியாக பணியில் இருந்த காலத்தில் 96000 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு யாரும் தீர்ப்பு வழங்கியது இல்லை..
நீதிபதி சந்துருவின் சாதனைகளை பேச, நிறைய தீர்ப்புகளும்,பத்திரிக்கை குறிப்புகளும் உள்ளன. ஆனால் வழக்கறிஞராக சந்துரு இருந்த போது எத்தனை சம்பவங்களை செய்திருப்பார் என்பதற்கு வரலாற்று ஆவணமாக வெளிவந்தது தான் ஜெய்பீம் திரைப்படம். இடது சாரி சிந்தனையாராளக களப்பணியில் வேகம் காட்டிய சந்துரு, வழக்கிறஞராக நடத்திய போராட்டங்கள் 100க்கும் மேற்பட்டவை.. பாதிக்கப்பட்டவர்களின் ஒரே ஆயுதம் சட்டம் என்பதற்கு சந்துரு களமாடிய வழக்குகளே உதாரணம்.. அதுதான் 2021ம் ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் வசனங்களில் எதிரொலித்து இருக்கும்.
இப்படியான ஒருவரா ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவைத்தான் பள்ளி கல்லூரிகள் நஞ்சு போல் பரவி வரும் சாதிய வன்முறைகளை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுத்துள்ளார். பள்ளிகளில் சாதி, மத பெருமைகளை மாணவர்களின் மனதில் இருந்து முளையிலேயே கிள்ளி எறிய ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு குழு அளிக்கும் பரிந்துரை மிகவும் முக்கியம் ஆகும். தமிழகத்தின் இளம் சமுதாயம் எத்தனை சாதி வெறியர்கள் வந்தாலுலும், அவர்கள் பின்னாலும் போகாமல் இருக்க சரியான பரிந்துரையை சந்தரு அளிப்பார் என்று நம்புவோம் அதனை அரசும் கண்டிப்பாக அமல்படுத்தும் என்றும் நம்புவோம்.
-
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications