அழுத்தம் தாங்கல! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த என்.ஸ்ரீனிவாசன்.. இந்தியா சிமெண்டை விற்றது ஏன்?
சென்னை: இந்தியாவின்.. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிஸ்னஸ்மேன்களில் ஒருவர் என். ஸ்ரீனிவாசன். தமிழ்நாட்டில் நெல்லைக்காரர்கள் பலர் மிகப்பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர். அதில் என். ஸ்ரீனிவாசன் முக்கியமான அடையாளங்களில் ஒருவராக இருந்தார்.
நாராயணஸ்வாமி சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராகவும், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான ஆளும் அமைப்பான பிசிசிஐயின் தலைவராகவும் இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளராகவும் உள்ளார். ஆனால் இதெல்லாம் 2கே கிட்ஸ்சுக்கு தெரிந்த அடையாளம். ஆனால் அவர் உண்மையில் இந்தியாவின் பெரிய பிஸ்னஸ்மேன்களில் ஒருவர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குநராக அவர் பதவி வகித்து வந்தார்.

இந்தியா சிமெண்ட்ஸ் எப்படி உருவாக்கப்பட்டது:
1946 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீநிவாசனின் தந்தையான எஸ் என் என் சங்கரலிங்க ஐயர் மற்றும் டி எஸ் நாராயணசாமி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுதந்திரம் அடைந்த சிறிது நேரத்திலேயே நாட்டின் முதல் ஐபிஓவை வெளியிட்ட நிறுவனங்களில் ஒன்றாகும். 1969 ஆம் ஆண்டில், அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, சீனிவாசன், அப்போது தனது 20-வது வயதில், நிறுவனத்தின் கூட்டு நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
அதன்பின் சீனிவாசன் 1989 இல் இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். 90களில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராசி சிமெண்ட்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் வகையில் இவர் மேற்கொண்ட முயற்சியை இந்தியாவே திரும்பி பார்த்த்து.
வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை கைப்பற்றி அதை இந்தியா சிமெண்ட்ஸுடன் இணைத்தார். 380 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்திய நிறுவன வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கையகப்படுத்தல்களில் ஒன்றாகும். அப்போது இந்தியாவே அவரை திரும்பி பார்த்தது. ஒரு நிறுவனத்தை hostile attempt முறையில் கையகப்படுத்தும் வழக்கம் அப்போது இந்தியாவில் பெரிதாக இல்லை. ஸ்ரீனிவாசன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைதான் இந்தியாவில் முதல் வெற்றிகரமான hostile attempt முறையில் கையகப்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும்.
இதன் மூலம் வெறும் மொத்தம் சுமார் 500 கோடி செலவழித்து, சுமார் 1000 கோடி செலவில் ஒரு கிரீன்ஃபீல்ட் ஆலையைப் பெற முடிந்தது. பின்னர், அவர் அரசாங்கத்திற்குச் சொந்தமான சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (சிசிஐ) யின் யர்ரகுன்ட்லா ஆலையை ஏலம் எடுத்து அதை இந்தியா சிமெண்ட்ஸுடன் இணைத்தார். இதேபோல் பல முக்கியமாக சிமெண்ட் நிறுவனங்களை பல ஏலத்திலும் போட்டியிலும் வீழ்த்தி தொடர்ந்து தனது நிறுவனத்தை நடத்தி வந்தார்.
வீழ்ந்தது எப்படி?:
தற்போது இதன் சிஇஓ பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார். குமார் மங்கலம் பிர்லா கட்டுப்பாட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 56 % பங்கை ஸ்ரீனிவாசன் விற்ற நிலையில்.. இந்த நிறுவனம் கைமாறி உள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட டெலிகாம் துறை தொடங்கி பல துறைகள் மோனோ பாலி அல்லது டூயல் பாலி ஆகி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் சிமெண்ட் துறையும் கிட்டத்தட்ட 2 நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சிமெண்ட் விலையில் சந்தை போட்டியை சமாளிக்க முடியாதது, இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கும் கீழ் உள்ள நிலங்களை விற்று சிமெண்ட் விலையை குறைக்கலாம் என்றால் அதிலும் சட்ட சிக்கல்கள் நிலவிய காரணத்தால் வேறு வழி இல்லாமல் நிறுவனத்தை விற்றார். சந்தை போட்டி அளவிற்கு விலை நிர்ணயிக்க முடியாத அளவிற்கு நிலவிய அழுத்தம் காரணமாக.. தனது பங்குகளை காப்பாற்றும் பொருட்டு.. கடனில் சிக்காத வகையில் குமார் மங்கலம் பிர்லா கட்டுப்பாட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 56 % பங்கை ஸ்ரீனிவாசன் விற்று உள்ளார். தற்போது இதன் சிஇஓ பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார். இதன் மூலம் சிமெண்ட் துறையில் என். ஸ்ரீனிவாசனின் பெரிய அத்தியாயம் முடிந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications