போனை போட்டு பேசிய அமித் ஷா.. ஓ பன்னீர்செல்வத்திற்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி? ஆஹா இது வேறயா!
சென்னை: ஓ பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் ஆவார். அவர் மத்திய அமைச்சர் ஆவதற்கான வழிகள் உள்ளன. அவரின் அரசியல் வாழ்க்கை முடியவில்லை என்பதை பார்ப்பீர்கள், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சீட் கொடுக்க பாஜக ரெடியாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் இல்லை.
அப்படி இருக்க தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். உங்கள் மகன் உள்ளிட்டோர் நிற்க வேண்டும் என்றால்.. தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். பாஜகவின் தாமரை சின்னத்திலேயே நில்லுங்கள். அதுதான் முக்கியம். அப்போதுதான் நீங்களும் வெல்ல முடியும்.. தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று பாஜகவினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கோரிக்கை: இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். அப்போது, நாம் இரட்டை இலைக்குத்தான் போராட வேண்டும். தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் நாம் பாஜக என்று ஆகிவிடும். அதிமுகவில் சேரவே முடியாது.
தனி சின்னத்தில் நிற்க வேண்டும். ஆனால தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனி சின்னத்தில் 2 - 3 சீட்டாவது வேண்டும் என்று கேளுங்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விளக்கி உள்ளார்.
பேட்டி: ஒன்இந்தியாவிற்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பேட்டியில், பாஜகவுடன் சென்றால் பாமகவிற்கு வாக்கு கிடைக்காது என்று சிலர் சொல்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது,. தமிழ்நாட்டில் கட்சியின் பலம், பிரதமர் வேட்பாளர் இதை எல்லாம் வைத்துதான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சி எது என்று தெரியும். அந்த அடிப்படையில் அதிமுக சில இடங்களில் இரண்டாம் இடம் வரும். சில இடங்களில் பாமக ஆதரவுடன் பாஜக இரண்டாம் இடம் வரும். பாமக போட்டியிடும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும். தர்மபுரியில் கண்டிப்பாக பாமக இரண்டாம் இடம் பிடிக்கும்.
சில இடங்களில் அதிமுக இரண்டாம் இடத்திற்கு வரும். பாமக ஆதரவு இருப்பதால் பாஜகவிற்கு இரண்டாம் இடம் கிடைக்கும். ராமதாஸ் வன்னியர்களுக்கு நம்பிக்கை தருகிறார். அவர்களுக்கு உண்மையாக இருக்கிறார். 2026ல் முதல்வர் வேட்பாளராக அன்புமணி வர வேண்டும் என்று பாமக நினைக்கிறது. அதில் தவறு இல்லை. அவர்கள் நினைக்கலாம்.
வன்னியர் வாக்குகளை பலரும் எதிர்பார்க்கிறார்கள். நாம் தமிழர் சீமான், எடப்பாடி, துரைமுருகன், என்று பலரும் வன்னியர் வாக்குகளை பிரிக்கிறார்கள். ஓ பன்னீர்செல்வத்திற்கு 5-6 சீட் கொடுக்க பாஜவினர் தயாராக இருந்தனர். ஆனால் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும்.
இப்படி இருக்க அவரை தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜகவினர் கூறினர். இந்த சூழலில் பன்னீர்செல்வம் மோடி பிரதமராக வேண்டும், நான் போட்டியிடாமல் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அமித் ஷாவே போன் செய்து பேசி உள்ளார்.
ஓ பன்னீர்செல்வத்திடம்.. நீங்கள் அதிக இடங்களில் போட்டியிடவில்லை என்றாலும் ஒரு இடத்திலாவது போட்டியிடுங்கள் என்று கூறியுள்ளனர். அவர் ஒரு இடத்தில் நின்றாலும் ஓகே.. ஓ பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் ஆவார். அவர் மத்திய அமைச்சர் ஆவதற்கான வழிகள் உள்ளன. அவரின் அரசியல் வாழ்க்கை முடியவில்லை என்பதை பார்ப்பீர்கள், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications