எடப்பாடி சொல்லித்தான் செல்லூர் ராஜு போஸ்ட் செய்தார்? ராகுல் பற்றிய போஸ்ட் ஏன்? இப்படி ஒரு காரணமா?
சென்னை; ராகுல் காந்தி பற்றிய செல்லூர் ராஜுவின் கருத்து தனிப்பட்ட கருத்து கிடையாது. எடப்பாடி சொல்லித்தான் செல்லூர் ராஜு அப்படி போஸ்ட் செய்தார். அவர் தனியாக எதுவும் போஸ்ட் செய்யவில்லை, என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இரண்டு நாட்களுக்கு முன் திடீரென காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியை பாராட்டி பதிவிட்டார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் செல்லூ ராஜூ, ராகுல் காந்தி ஒரு ஹோட்டலில் அமர்ந்து மக்களுடன் சாப்பிட்டபடி அவர்களுக்கு எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை எனத் தெரிவித்தார். அதன்பின் இந்த பதிவையும் நீக்கினார்.
இந்த நிலையில்தான் செல்லூர் ராஜுவின் செயல் பற்றி மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ராகுல் காந்தி பற்றிய செல்லூர் ராஜுவின் கருத்து தனிப்பட்ட கருத்து கிடையாது. எடப்பாடி சொல்லித்தான் செல்லூர் ராஜு அப்படி போஸ்ட் செய்தார். அவர் தனியாக எதுவும் போஸ்ட் செய்யவில்லை. செல்லூர் ராஜு முன்பு விஜய்யை வாழ்த்தினார். அதுவும் கூட எடப்பாடி சொல்லித்தான் நடந்தது. ஜெயலலிதா ஊழலை வைத்து படம் எடுத்த விஜயை செல்லூர் ராஜு அவரை வாழ்த்துகிறார். கடைசியில் லோக்கல் சண்டை காரணமாக ராகுல் காந்தி பற்றிய செல்லூர் ராஜுவின் கருத்து நீக்கப்பட்டது.
லோக்கல் அளவில் நிர்வாகிகள் இடையே சண்டை வந்ததால் அந்த பதிவை செல்லூர் ராஜு நீக்கிவிட்டார். தலைமை சொல்லித்தான் இப்படி எல்லாம் செய்கிறார். காங்கிரஸ் நம்மகிட்ட வருகிறார்கள்.. 30 சீட் கொடுப்போம் என்றெல்லாம் கதை விடுவார். இதன் நம்பி செல்லூர் ராஜு போஸ்ட் செய்துள்ளார்.
எடப்பாடி எப்படி காங்கிரஸ் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எட்டா கனிக்கு கொட்டாவி விடுகிறது அதிமுக. சுனில் கனகூலு எடப்பாடிக்கு ஆதரவாக காங்கிரஸிடம் பேசுவார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதெல்லாம் பொய். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வரும் என்றெல்லாம் வரும் என்று சொன்னார்கள்.
அது எதுவுமே நடக்கவில்லை. இப்போது அதிமுக பரிதாபமாக போய்விட்டது. அதிமுகவின் பகல் கனவு எல்லாம் தோற்றுவிட்டது. கூட்டணியை ஸ்டாலின் திறம்பட கையாண்டு வருகிறார். அவர் கூட்டணியை உடைக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறார். அது வெற்றி கூட்டணி. ஆர் கே நகரை தவிர வேறு எங்கும் தோல்வி அடையாத அணி.
. எடப்பாடி எவ்வளவு முயன்றும் கூட அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவில்லையே. எவ்வளவு முயன்றும் காங்கிரஸ் இறங்கி வரவில்லையே. 2026ல் கூட்டணியை உறுதி செய்துதான் 2024ல் காங்கிரஸ் - திமுக கூட்டணியே மேற்கொள்ளப்பட்டது.
2024ல் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்.. 2026ல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறியே ஸ்டாலின் கூட்டணியை இறுதி செய்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் கலைஞரை விட வலிமையானவர் ஸ்டாலின். கலைஞரை விட ஸ்டாலின் நல்ல திட்டம் போட கூடியவர், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications