செந்தில் பாலாஜி எங்கே உள்ளார் என தெரிந்தும் ஹேபியஸ் கார்பஸ் மனு அளித்த மனைவி! ஏன்? திமுக மாஸ் பிளான்
சென்னை: செந்தில் பாலாஜி எங்கே உள்ளார் என தெரிந்தும் ஹேபியஸ் கார்பஸ் மனுவை அவரின் மனைவி தாக்கல் செய்ய முக்கிய காரணம் உள்ளது.
ஹேபியஸ் கார்பஸ் என்பது ஆட்கொணர்வு மனு ஆகும். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பான 3 மனுக்கள் மீதான விசாரணை நேற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணையில் எடுக்க வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பு.
செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்பது தொடர்பான மனுவில் தீர்ப்பு. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருப்பவரை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்பது தொடர்பான தீர்ப்பு.

இது போக இன்னொரு பக்கம் அவரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. 17 மணி நேர ரெய்டிற்கு பின் நேற்று முதல்நாள் இரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். ரத்த அழுத்தம், நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மனுதாக்கல்: இதையடுத்தே செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார். அதன்படி என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார்.
இது போன்ற மனுக்களில் போலீஸ் குறிப்பிட்ட நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு போலீஸ் அழைத்து வரும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த கைது பற்றி நேற்று வரை அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால்தான் இத்தனை குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று அதிகாலைதான் செந்தில் பாலாஜி மனைவி அவசரமாக கரூரில் இருந்து சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அதிரடி திருப்பமாக செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் விலகினார். இதையடுத்து இன்று ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணை செய்து வருகிறது.
காரணம் என்ன?: செந்தில் பாலாஜி எங்கே உள்ளார் என தெரிந்தும் ஹேபியஸ் கார்பஸ் மனுவை அவரின் மனைவி தாக்கல் செய்ய முக்கிய காரணம் உள்ளது.
ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் என்பது ஒருவரை சட்ட விரோதமாக வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ காவல்துறையினர் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் அடைத்து வைத்து இருந்தால். அவரை கோர்ட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று காவல்துறைக்கு, விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிட முடியும். அந்நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, நீதிமன்றம் உத்தரவிடும்.
இதை உறுதி செய்யவே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை கைது செய்தது பற்றி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிடவில்லை, கைதுக்கான காரணத்தை சொல்லவில்லை, ஏன் கைது செய்தோம் என்று செந்தில் பாலாஜிக்கே சொல்லவில்லை என்பதால்தான் செந்தில் பாலாஜி எங்கே உள்ளார் என தெரிந்தும் ஹேபியஸ் கார்பஸ் மனுவை அவரின் மனைவி தாக்கல் செய்து உள்ளார்.
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தகவல் தெரிவிக்காதது சட்டவிரோதம் என்பதால் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை பிளான் தோல்வி: இந்த மனுவிற்கு பின் இன்னொரு காரணமும் உள்ளது. உண்மையில், செந்தில் பாலாஜியை விசாரணை என்று அழைத்து சென்று, டெல்லியில் வைத்து கைது செய்து, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரிமாண்ட் செய்து, கஸ்டடியில் எடுப்பதுதான் அமலாக்கத்துறை. டெல்லியில் வைத்து விசாரித்தால் கஸ்டடியில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வாக்கு மூலம் பெறுவது தான் அமலாக்கத்துறை திட்டமாக இருந்தது.

கஸ்டடிக்கு பிறகு குறைந்த பட்சம் 3 மாதம் திகார் சிறையில் அடைத்து வைப்பதும் திட்டத்தின் ஒரு பகுதி. அதுவே சென்னையில் கைது செய்தால் உடனடியாக அப்பகுதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்பதால் தான், சென்னையில் கைது செய்வதை தவிர்த்திருக்கிறார்கள். இதனால்தான் கைது பற்றி சொல்லாமல் அவரை அழைத்து செல்ல முயன்றனர்.
ஆனால் திடீரென நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டதும், திமுக சட்டத்துறை மிகச்சரியாக கையிலெடுத்த 'ஆட்கொணர்வு மனு' என்கிற ஆயுதமும் தான் வேறு வழியின்றி சென்னையில் கைது என்பதை அமலாக்கத்துறை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று.
இதன் காரணமாகவே சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய சூழலும் உருவானது. ஆட்கொணர்வு மனு மூலம் முறையாக அமலாக்கத் துறையின் திட்டத்தில் மண்ணள்ளி போட்டிருக்கிறது திமுக சட்டத்துறை.












Click it and Unblock the Notifications