ஆட்டம் சரியில்லை! ஸ்டாலின் மேஜைக்கு போன "ரெட் ரிப்போர்ட்".. பதவி பறிக்கப்பட்ட அந்த அமைச்சர்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் நிலையில் முக்கியமான சிலர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான முடிவுகளை சாதாரணமாக எடுக்கவில்லை. இரண்டு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். அதன்படி உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் ஒன்று இதற்கு காரணம். அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன.. மக்கள் இடையே அவர்களின் மதிப்பு எப்படி இருக்கிறது.. துறையில் முடிவுகள் எந்த அளவிற்கு எடுக்கப்பட்டு உள்ளன என்பது பற்றி உளவுத்துறை சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.

udhaynidhi stalin senthil balaji

இது மட்டுமின்றி.. இரண்டாவதாக முதல்வர் ஸ்டாலின் அமைப்பு ஒன்றின் மூலம் ரிப்போர்ட் தயார் செய்துள்ளார். அதாவது ஒரு அமைப்பு மூலம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை வாங்கி அதையும் ஆய்வு செய்துள்ளார். இந்த இரண்டு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் தான் அமைச்சர்கள் 3 பேரின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

அதோடு இல்லாமல் ஒரு அமைச்சரின் பதவி முக்கியமான ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டு உள்ளது. ஒரு அமைச்சரின் ஆட்டம், செயல்பாடு சரியில்லை. கட்சியில் பெரிய பதவியில் இல்லாத அந்த அமைச்சரின் குடும்பத்தினர் கட்சி செயல்பாடுகளில் தலையிடுகிறார்கள். மாவட்ட செயலாளர் செயல்பாடுகளை தடுக்கிறார்கள் என்று புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதை பற்றியே முதல்வர் ஸ்டாலினுக்கு ரெட் ரிப்போர்ட் ஒன்றும் சென்றுள்ளதாம். இதன் காரணமாக "அந்த " அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்..

இன்று மாற்றம்: தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்படுகிறது. இன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

இன்று அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.

தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.

செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பாலும் அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்படும் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+