சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு.. உயர்நீதிமன்ற உத்தரவு என்ன?
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பத்திரிகையாளர் வராகி வழக்கு விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பத்திரிகையாளர் வராகி மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் "பத்திரிகையாளர் வராகி என்பவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்
உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில், வராகி மீது உள்நோக்கத்துடன் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா, "ஒவ்வொரு வழக்கு விசாரணையின்போதும் அந்த வழக்கின் நிவாரணத்திற்கு ஏற்ப சென்னை உயர்நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்தை யாரும் வலியுறுத்த முடியாது. இந்த உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை கவனத்தில் கொள்ளாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றுதான் அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறிவிட்டது என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளி கோர முடியாது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பொறுப்பேற்றபின் பல ரவுடிகளை அடக்கியிருக்கிறார். இதற்காக நுண்ணறிவு காவல் பிரிவை உருவாக்கி தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார். பல சமூக விரோத செயல்களை முன்கூட்டியே தடுத்துள்ளார். இதனால் ஏற்படும் காழ்ப்புணர்ச்சிகளால் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று தமிழக அரசின் தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா நேற்று வாதிட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரமும் இல்லை. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த வழக்குகளை போலீஸ் விசாரித்து தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கோர்ட்டு விசாரணையின் அடிப்படையில்தான், வராகி மீது போடப்பட்டது பொய் வழக்கா, இல்லையா? என்ற உண்மை தெரியவரும். அதனால், ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கூறி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications