அஞ்சலையை விடக்கூடாது! ஆம்ஸ்ட்ராங்கிற்கு இப்படி சதி பண்ணிருக்காங்களே! ஸ்டேட்மெண்டை கேட்டு போலீஸ் ஷாக்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர் ஹரிதரன் என போலீஸ் தகவல் வெளியிட்டு உள்ளனர் .

இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. தற்போது விசாரணை முடிந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார்.
விறுவிறு விசாரணை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளதால் அவரது 2 வங்கிக் கணக்கு விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை அஞ்சலை மூளைச் சலவை செய்ததாகவும் தகவல்.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை புழல் சிறையிலும், ஹரிதரன் பூந்தமல்லி சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கைது: ஏற்கனவே அஞ்சலை இதற்கு முன் வேறு சில வழக்குகளில் கைதும் ஆகி இருக்கிறார். உதாரணமாக சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை இதற்கு முன் கைதாகி விடுதலை ஆகி உள்ளார். மாஜர்கான் என்பவரிடம் ₹4 லட்சம் கடனுக்கு ₹8 லட்சம் வாங்கியதுடன், மீண்டும் ₹9.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக வந்த புகாரில் இதற்கு முன் கைதாகி விடுதலை ஆகி உள்ளார். இப்போது மீண்டும் கைதாகி உள்ளார்.
கொலை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதில் கைதான் அஞ்சலை பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் . அதிமுகவின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஹரிதரனை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் - ஆருத்ரா கோல்டு -தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது அரசியல் கொலை அல்ல.. அதை தாண்டி வேறு எதோ இருக்கிறது.. பெரிய கேங்க் வார் விவகாரம் இதற்கு பின் உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications