அந்த யூடியூப் வீடியோவை பார்த்தது ஏன்? நாம் தமிழரை நெருக்கிய என்ஐஏ.. விசாரணையில் கேட்ட அந்த கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ ரெய்டு நடத்தப்பட்டதற்கு பின் உள்ள காரணங்கள் தொடர்பாக ஷாக் தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. இந்த ரெய்டுக்கு பின் யூ டியூப் வீடியோ ஒன்று காரணமாக மாறி இருக்கலாம் என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை, திருச்சி, தென்காசி உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதிகாலை 6 மணியில் இருந்தே தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட தமிழ் இயக்கம் ஒன்றின் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பில் இருந்த நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

 Why did you watch that video? Exclusive on NIA raid on Naam Tamilar Katchi executives houses

ரெய்டு: இன்று காலை நடத்தப்பட்ட ரெய்டில் என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளிடம் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளனர். முக்கியமாக யூடியூப் வீடியோ ஒன்றை பற்றி என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகள் சிலரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதன்படி யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் வேறு ஒருவர் என்ஐஏ விசாரணையில் உள்ளார். நாம் தமிழருடன் நெருங்கிய தொடர்பில் அவர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரிடம் செய்யப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ. சோதனையில் நாம் தமிழர் சிக்கியதாக கூறப்படுகிறது.

அந்த யூடியூப் வீடியோவை பார்த்தது ஏன்? என்று நாம் தமிழரை நெருக்கிய என்ஐஏ, விசாரணையில் சரமாரியாக கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. பிரத்யேக செயலி மூலம் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ கண்களில் சிக்கியதால் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தடை செய்யப்பட்ட செயலி மூலம் வெளிநாட்டில் உள்ள அமைப்பு ஒன்றுடன் தொடர்பில் இருந்ததாகவும், யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் விசாரிக்கப்படும் நபருடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரெய்டுக்கு காரணம் என்ன?: நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீடுகளில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனைக்கு காரணமாக.. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த புகாரின் காரணமாக சோதனை என தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக சில அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பிய நிதி காரணமாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

யார் வீட்டில் எல்லாம் ரெய்டு?: இன்று அதிகாலை திருச்சியில் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் இருந்துதான் அப்படியே நூல் பிடித்து என்ஐஏ மற்ற நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை செய்தது.

சாட்டை வீட்டை தொடர்ந்து அங்கு கிடைத்த ஆவணங்கள், போன் பேச்சுக்கள் வழியாக இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோரிடம் என்ஐஏ விசாரணை செய்தது. அவர்களின் வீடுகளிலும் ரெய்டு செய்தது.,

அங்கே கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தென்காசியை சேர்ந்த மதிவாணன், கோவையில் முருகன் மற்றும் நாதக முன்னாள் நிர்வாகி ரஞ்சித் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையில் இருந்து இங்கே 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று அதிகாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியின் டாப் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ தீவிர ரெய்டுகளை நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு நிதி தொடர்பாகவே விளக்கம் கேட்டு நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பி உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+