Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏதாவது பண்ணுங்க".. தகித்து நின்ற தலைகள்.. ரொம்ப அப்செட்டாம்.. சாட்டையை சுழற்ற போகும் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுக தரப்பு சமீபத்தில் எடுத்த சில முடிவுகள் காரணமாக திமுகவில் இருக்கும் சில நிர்வாகிகளே கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த 1 வருடம் ஆகிவிட்டது. சரியாக கடந்த வருடம் மே மாதம்தான் திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது.

ஆனால் இந்த வருடம் மே மாதம் திமுகவிற்கு சென்ற ஆண்டை போல அத்தனை மகிழ்ச்சிகரமாக இல்லை. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சில சவால்களை அக்கட்சி எதிர்கொண்டு வருகிறது.

அடுத்தடுத்த சம்பவங்கள்

அடுத்தடுத்த சம்பவங்கள்

இந்த மாத தொடக்கத்தில்தான் தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கு பட்டின பிரவேச நிகழ்ச்சி சர்ச்சையானது. விசிக, திக இதை எதிர்த்த நிலையில், மயிலாடுதுறை கோட்டாச்சியார் பாலாஜி இந்த நிகழ்விற்கு தடை விதித்தார். இதை தொடர்ந்து பாஜக, அதிமுக, பல்வேறு ஆதீனங்கள் அரசுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தனர். இதில் அரசு கடுமையான முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசோ ஆதீனங்களுக்கு ஆதரவாக, பல்லக்கு நிகழ்வை அனுமதித்தது.

யு டர்ன்

யு டர்ன்

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்த மாத தொடக்கத்தில் மதுரை மருத்துவ கல்லூரியில் மகிரிஷி சரக சப்த் உறுதிமொழி எடுக்கப்பட்டது சர்ச்சையானது.இந்த விவகாரத்தில் மருத்துவ கல்லூரி டீன் இரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இரத்தினவேலு இந்த உறுதிமொழிக்கு அனுமதி கொடுத்தது தவறு என்று கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த முடிவு திருமா பெறப்பட்டு, அவர் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

அரசு யு டர்ன்

அரசு யு டர்ன்

அரசு எடுத்த இந்த யு டர்ன் முடிவு விமர்சனத்திற்கு உள்ளது. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் பெரிய சர்ச்சையானது. ஆம்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சர்ச்சை காரணமாக தற்போது மழை என்று கூறி இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும். இந்த தடையை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே திருவிழா நடக்கும் பகுதிக்கு எதிரே மாட்டிறைச்சி பிரியாணி வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வோம் என்று விசிக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. திமுக ஆட்சியில் பீப் தடையா.. இது என்ன உத்தர பிரதேசமா என்று திமுகவினரே சிலர் இணையத்தில் இந்த விவகாரத்தை விமர்சனம் செய்து இருந்தனர். இது போக சமீபத்தில்தான் அயோத்தி மண்டப வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

திமுக அப்செட்

திமுக அப்செட்

இப்படி தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகள் திமுக நிர்வாகிகள் சிலர் இடையே அப்செட்டை ஏற்படுத்தி உள்ளதாம். ஆதீனம் பல்லக்கு தடையில் இன்னும் உறுதியாக இருந்து இருக்க வேண்டும். சரி.. ஆதீனம் நிகழ்விற்கு அனுமதி அளித்தது கூட ஓகே.. ஆனால் மன்னார்குடி ஜீயர் அமைச்சர்களை நேரடியாக மிரட்டினாரே.. அவர் மீது எதுவும் ஆக்சன் இல்லையே. நாம் இன்னும் வலுவாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லை என்றால் மரியாதையை கொடுக்க மாட்டார்கள் என்று திமுக நிர்வாகிகள் புலம்ப தொடங்கி உள்ளனராம்.

வெளிப்படை

வெளிப்படை

இதை வெளிப்படையாகவே திமுக நிர்வாகிகள் இணையத்திலேயே சொல்ல தொடங்கிவிட்டனர். அதோடு பீப் பிரியாணி தடை விஷயத்திலும்.. அரசு பீப் பிரியாணிக்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும். மாறாக மழையை காரணம் காட்டி ஆம்பூர் பிரியாணி விழாவை ஒத்தி வைப்பது சரியாக இருக்காது. குறைந்தது அந்த ஆட்சியர் மீதாவது வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் பல அதிகாரிகள் அரசுக்கு எதிரான கொள்கையோடு இருக்கிறார்கள். அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.. என்று திமுக நிர்வாகிகள் வெளிப்படையாக புலம்பி வருகிறார்களாம்.

நல்லது செய்கிறோம்

நல்லது செய்கிறோம்

இந்த அரசு அவ்வளவு நல்லது செய்கிறது.. பேரறிவாளன் வழக்கில் சிறப்பாக வாதிட்டு உள்ளது. நீட் விவகாரத்தில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்துவிட்டது. பல புதிய முதலீடுகள் வருகின்றன. ஆனால் அதை பற்றி திமுகவினர் பேச முடியவில்லை. இது போன்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லவே நேரம் சரியாக இருக்கிறது என்று நிர்வாகிகள் புலம்புகிறார்களாம். கடந்த ஆட்சியில் ஜெயக்குமார் இருந்தார். அவர் அனைத்து சர்ச்சைக்கும் உடனுக்குடன் காலை 11 மணிக்கு பதில் சொல்வார். அப்படி திமுகவும் ஒரு அமைச்சரை களம் இறக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் விரும்புகிறார்களாம்.

சாட்டையை சுழற்றும் முதல்வர்

சாட்டையை சுழற்றும் முதல்வர்

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் இது தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பார்.. சட்டையை சுழற்ற போகிறார் என்று கூறப்படுகிறது. அரசுக்கு எதிராக வைக்கப்படும் சில பிரச்சாரங்களை முறி அடிக்கும் வகையில் சில முடிவுகளை விரைவில் அவர் எடுப்பார். அதேபோல் அமைச்சர்கள் சார்பாக இனி அடிக்கடி செய்தியாளர் சந்திப்பும் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+