நம்பர் 2.21 கோடி.. திமுகவிற்கு மாலையோடு மாலை போன குட்நியூஸ்.. துள்ளும் அறிவாலயம்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் திமுகவிற்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்று தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டு உள்ளதாம்.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதத்தை 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தொகுதி வாரியாக பதிவான ஓட்டு சதவீதம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம் குறித்து இரவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மறுநாளே ஓட்டு சதவீதம் மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அன்று நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது என்று கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதியாக வெளியிடப்படும் வாக்கு சதவீதம் என்பது ஒன்று முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க தான் செய்யும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை சுமார் 3 சதவீதம் வரை குறைந்தது. இதையடுத்து குழப்பம் ஏற்பட்டது.
ஏற்கனவே 2 முறை ஓட்டு சதவீதம் மாற்றப்பட்ட நிலையில் 3வது முறையாக மாற்றி கூறியது. தேர்தல் ஆணையம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என்ற நிலையில் இப்போது 69.71 சதவீதம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தொகுதி வாரியாக பதிவான ஓட்டு சதவீத விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக குட்நியூஸ்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் திமுகவிற்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்று தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டு உள்ளதாம்.
அதன்படி இந்த முறை தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்ற லிஸ்ட் திமுகவிற்கு சென்றுள்ளதாம். 39 தொகுதிகளையும் சேர்த்து 2.12 கோடி ஆண்கள் வாக்களித்துள்ள நிலையில், அதை விட 8.6 லட்சம் அதிகமாக 2.21 கோடி பெண்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
இதை திமுக பாசிடிவ் விஷயமாக பார்க்கிறது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000, பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை மாதம் 1000 , இலவச பேருந்து திட்டம் போன்ற திட்டங்கள் காரணமாக பெண்கள் வாக்குகள் திமுகவிற்கே அதிகம் வரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது வெளியாகி உள்ள வாக்கு சதவிகிதம் காரணமாக திமுக குஷியில் உள்ளதாம்.
லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பொதுவாக வாக்கு சதவிகிதம் பல வித செய்திகளை சொல்லும். வாக்கு சதவிகிதம் அதிகம் இருந்தால் அது ஆளும் கட்சிக்கு எதிரான வாக்கு என்பார்கள். அதே சமயம் பெண்கள் வாக்கு அதிகம் இருந்தால் அது அதிமுக வாக்கு என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது. காலம் செல்ல செல்ல இதெல்லாம் மாறிவிட்டது.
இப்போது வாக்கு சதவிகிதம் தொகுதி தொடர்புடையது ஆகிவிட்டது. தொகுதி ரீதியான பிரச்சனையாக அது மாறிவிட்டது. உள்ளூர் பிரச்சனையே இதற்கு காரணம். இப்போது பெண்கள் வாக்குகள் அதிகம் வந்தால் அது திமுக வாக்குகள் . திமுக வாக்குகள் வந்து குவிந்து உள்ளது. பெண்கள் வாக்குகளை மொத்தமாக பல்வேறு திட்டங்கள் மூலம் அள்ளி உள்ளனர். மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து மூலம் இப்படிப்பட்ட பெண்களின் வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஆண்களின் வாக்குகள் குறைந்தால் கூட பெண்களின் வாக்குகளை அள்ளிவிட்டனர். இதற்கு முன் அதிக வாக்குகள் பதிவானால் அது அரசுக்கு வரும் வாக்கு என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. இப்போது பல தொகுதிகளில் 70-80 வரை பதிவாகி உள்ளது. தருமபுரியில் அதிகம் பதிவாகி உள்ளது. வெயில் முடிந்த பின் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது .
தேர்தல் ஆணையம் கொஞ்சம் இதில் சரியாக செயல்பட்டு இருக்கலாம். சரியான எண்களை வெளியிட்டு இருக்கலாம். சில தொகுதிகளில் 10 சதவிகிதம் வாக்குகள் மாற்றத்தை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அவர்கள் சரியாக கணக்கு போட்டு இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையை இது இழக்க வைக்கும். இவர்களின் செயல்பாடு நம்பிக்கையை இழக்க வைக்கிறது.
ஏற்கனவே மின்னணு எந்திரம் மீது சந்தேகம், கேள்வி உள்ளது. ஜனநாயகத்தில் நம்முடைய வாக்குரிமை இது. இதில் கூட தேர்தல் ஆணையம் மெத்தனமாக இருக்க கூடாது. அவர்களின் மெத்தனம் கடுமையான விமர்சனங்களை, கேள்விகளை எழுப்பும். 1-2 சதவிகிதம் திருத்தப்பட்டால் ஓகே. 10 சதவிகிதம் எல்லாம் திருத்தப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications