செல்வப்பெருந்தகை வந்துட்டாரு.. குஷியில் துள்ளும் திமுக.. காங்கிரஸ் முடிவால் ஸ்டாலின் ஹாப்பி.. ஏன்?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் திமுகவிற்கு இனிப்பான செய்தியாக சென்றுள்ளது.
கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் பதவியில் இருந்தவர்களில் கே.எஸ்.அழகிரியும் ஒருவர்.. சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மாற்றம்: இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம்.
கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டு கடந்துவிட்டது. இதனால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசனை செய்து வந்தது. எதிர்பார்த்தபடியே செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவர் ஆகி உள்ளார்.
டெல்லி சென்றார்: சமீபத்தில்தான் டெல்லி சென்றார் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. டெல்லியில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார்.
கார்கே பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அதே பட்டியலின சமூகத்தை சேர்ந்த செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் பிரமுகர்களிடம், '' நான் டெல்லி சென்று கார்கேவை சந்திக்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு வருவேன்'' என்று சொல்லிவிட்டுத்தான் டெல்லிக்கு ப்ளைட் பிடித்தார் செல்வப் பெருந்தகை.
அகில இந்திய தலைவராக கார்கே வந்ததிலிருந்தே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மீது அதீத மோகம் செல்வப் பெருந்தகைக்கு. சமீபகாலமாக அந்த ஆசை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முன்பு டெல்லி சென்ற அவர், கார்கேவை சந்தித்துள்ளார்.
தமிழக அரசியல் சூழல், காங்கிரசை திமுக கண்டுகொள்வதே இல்லை, காங்கிரஸ்காரர்களின் எதிர்பார்ப்புகளை திமுக தலைமையிடம் சொல்லி அதனை நிறைவேற்ற கே.எஸ்.அழகிரி அக்கறை காட்டுவதில்லை, அவர் மீது காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிருப்தி அதிகமாகி விட்டது என்றெல்லாம் விவரித்திருக்கிறார் செல்வப் பெருந்தகை.
உட்கட்சி மோதல்: அதிலும் கே எஸ் அழகிரிக்கு கீழ் குடுமியான் உட்கட்சி மோதல் உள்ளது என்றும் புகார் வைத்துள்ளார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கார்கே, நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி சில அரித்மேட்டிக் கால்குலேசனை விவரித்து சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அதற்கு தெளிவான பதிலை அவர் வழங்கி உள்ளார். அரசியல் ரீதியான விசயங்கள் முடிந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் தன்னை நியமிக்க வேண்டும் என தனது ஆசையை சொல்லி உள்ளார்.
இதை கார்கே கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் திமுகவிற்கு இனிப்பான செய்தியாக சென்றுள்ளது.
இவர் திமுகவுடன் நட்பாக இருக்க கூடியவர். சட்டசபையிலேயே திமுகவுடன் நெருக்கம் காட்ட கூடியவர். இந்த நிலையில்தான் செல்வப் பெருந்தகை திமுகவிற்கு சாதகமாக மாறி உள்ளது. முக்கியமாக தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளில் செல்வப் பெருந்தகை திமுகவுடன் நட்பாக செல்ல கூடியவர். இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் வாய்ப்புகள் உள்ளன. இவரின் வருகை திமுக தலைமையையும், நிர்வாகிகளையும் கூட குஷி படுத்தி உள்ளதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications