ஆஹா! கோவைக்கு மூட்டை கட்டும் அதிமுக? ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கே போக முடியாது? "குதித்த" பிஸ்னஸ் புள்ளி?
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிக தீவிரமாக செய்து வருகிறார்கள். எப்படியாவது ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஆனால் இதற்கு ஓபிஎஸ் தரப்பும் பல்வேறு முனைகளில் இருந்து முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது.
Recommended Video
வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு.. சிக்கன் பிரியாணி.. சீரக சம்பா அரிசி.. மட்டன் வறுவல்.. மீன் பொரியல்.. ரசகுல்லா.. அல்வா எல்லாம் செய்து.. பெரிய வாழை இலையில் பரிமாறி.. கடைசியில் சாப்பிட போகும் முன் விருந்தாளி கையை மட்டும் கட்டிப்போட்டால் எப்படி இருக்கும்? அந்த விருந்தாளி எவ்வளவு ஏமாற்றம் அடைவார்?
அந்த விருந்தாளியின் நிலையில்தான் கலங்கிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த அதிமுக பொதுக்குழுவில் வாழை இலை விருந்து எல்லாம் போடப்பட்டாலும்.. அவரால் ஒற்றை தலைமையை ருசிக்க முடியாத அளவிற்கு கைகள் கட்டப்பட்டு விட்டன. கைகளை கட்டியது சென்னை உயர் நீதிமன்றம்!

உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்ற தடையால் எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச்செயலாளர் பதவி ஏற்பிற்கான தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழுவை கூட்டி எப்படியாவது ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக நேற்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.

கூட்டம்
நேற்று நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டவும் இல்லை. தலைமை கழக செயலாளர் என்ற பதவியை பயன்படுத்தி கூட்டத்தை கூட்டியது என்னவோ எடப்பாடி பழனிசாமிதான். இந்த கூட்டத்தில்.. ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவியை நீக்குவது. ஓபிஎஸ்ஸின் அடிப்படை உறுப்பினர் பதவியை நீக்குவது உள்ளிட்ட சில விஷயங்களை ஆலோசனை செய்துள்ளனர். ஆனால் அதில் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இடம் தேடல்
அதேபோல் பொதுக்குழுவை எங்கு கூட்டுவது.. அதற்கான இடத்தை தேர்வு செய்வது.. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பது பற்றி ஆலோசனை செய்துள்ளனர். அதோடு எடப்பாடி ஆதரவாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு எப்போதும் வானகரத்தில்தான் நடக்கும். வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில்தான் பொதுக்குழு நடக்கும். ஆனால் இந்த முறை ஜூலை 9 மற்றும் 11 தேதிகளில் அங்கு திருமணம் நடப்பதால் கூட்டம் நடத்த முடியாது.

திருமணம்
இந்த நிலையில்தான் பொதுக்குழு நடத்த இடம் தேடி எடப்பாடி டீம் அலைந்து கொண்டு இருக்கிறது. மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் இன்று ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இதற்கு உயர் கல்வித்துறை அனுமதி தராது என்கிறார்கள். பின்னர் விஜிபி இடம், ஈசிஆரில் உள்ள ஒரு மண்டபம் ஆகியவற்றிலும் ஆய்வு செய்தனர். தேதி கிடைத்தால் இடவசதி இல்லை.. இடவசதி இருந்தால் தேதி இல்லை என்ற சிக்கல் எடப்பாடி தரப்பிற்கு ஏற்பட்டு உள்ளதாம்.

கோவை
இந்த நிலையில்தான் கோவையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிஸ்னஸ் மேனுக்கு சொந்தமான பெரிய மண்டபம் ஒன்றில் பொதுக்குழுவை நடத்தலாமா என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனை செய்துள்ளதாம். இரண்டு விஷயங்களுக்காக இந்த மண்டபத்தை தேர்வு செய்ய எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம். அதன்படி கோவையில் கூட்டம் நடந்தால் முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்களை களமிறக்க முடியும் என்று எடப்பாடி நினைக்கிறாராம்.

ஆதரவு
முழுக்க முழுக்க கொங்கு மண்டல நிர்வாகிகளை களமிறக்க முடியும். பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாலாட்ட முடியாத நிலை ஏற்படும். அதோடு ஒருவேளை ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கும் முடிவுகள் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டாலும்.. கோவையில் மீட்டிங் நடந்தால் பாதுகாப்பாக இருக்கும். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற திட்டத்தில் கோவைக்கு அதிமுக பொதுக்குழுவை மூட்டை கட்டும் திட்டத்தில் எடப்பாடி இருக்கிறாராம்.

நெருக்கம்
இதற்காக தனக்கு நெருக்கமான பிஸ்னஸ் மேன்கள் சிலரிடம் கோவை அதிமுக நிர்வாகிகள் பேசி வருகிறார்களாம். அங்கு இருக்கும் மண்டபங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்களாம், விரைவில் இதில் முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய ரத்தத்தின் ரத்தங்களோ.. பொதுக்குழுவை சென்னையில் நடத்திய போதே ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டார்.. கோவையில் எல்லாம் நடந்தால் மொத்தமாக அவர் கூட்டத்திற்கு உள்ளேயே வர முடியாத அவலம் கூட ஏற்படும், என்கிறார்கள் புலம்பலாக!
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications