தேனி காற்று திசை மாறுதே! அதே ஜெ "பாணி".. ஸ்டாலினுக்கு ஓபி ரவீந்திரநாத் அனுப்பிய தூது? பார்த்தீங்களா?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் எம்பி ஓ பி ரவீந்திரநாத் அளித்த பேட்டி ஒன்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர் தினத்தில் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த பட்ஜெட்டில் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டிலேயே உடனுக்குடன் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தை அரசியல் கடந்து பல்வேறு கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.

ஓ பி ரவீந்திரநாத்
இந்த திட்டத்தை பாராட்டி பேசிய அதிமுக எம்பி ஓ பின் ரவீந்திரநாத், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது. பெண் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு வழங்கியது. இப்போது இருக்கும் அரசு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மிக நல்ல திட்டம். இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன். முன்னதாக அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்தோம்.

ஜெயலலிதா பாணி
பெண்களுக்கு சைக்கிள் வழங்கினோம். அதேபோல் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினோம். அதேபோல் இந்த 1000 ரூபாய் வழங்கும் திட்டமும் நல்ல திட்டம்தான் என்று கூறினார். இதையடுத்து அதிமுக பொதுக்குழு பற்றி பேசிய ஓ பி ரவீந்திரநாத், அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும். உச்ச நீதிமன்றம் செல்வது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. விரைவில் இதில் முடிவு எடுக்கப்படும் என்று ஓ பி ரவீந்திரநாத் தெரிவித்தார்.

நலத்திட்டம்
திமுக அரசின் நலத்திட்டம் ஒன்றை திடீரென அதிமுக எம்பி ஓ பி ரவீந்திரநாத் பாராட்டி இருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் மகனும் எம்பியுமான ஓ பி ரவீந்திரநாத் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். தேனி மாவட்ட முன்னேற்றம் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் பேசுவதற்காக முதல்வரை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

என்ன நடக்குது?
அதன்பின் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஆர் கூட.. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் முடிவு எடுத்தால் மட்டும் போதாது. பொதுக்குழு நடக்க வேண்டுமா, வேண்டாமா என்று அரசும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதாவது பொதுக்குழுவிற்கு அரசு தடை செய்ய வேண்டும். பொதுக்குழுவை நடத்த முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க கூடாது என்று ஓபிஆர் சூசமாக சொல்வது கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது திடீரென அரசுக்கு ஆதரவாக ஓபிஆர் பேசி உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications