கைக்கு வந்த கால்குலேசன்.. சீமானுக்கு போனை போட்ட விஜய்.. நீங்க பெரிய ஆள் ஆச்சே.. தட்டி கழித்த சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி என்பதை அழுத்தமாக சொல்லி வருகிறார் நடிகர் விஜய். ஆனால், நிஜத்தில் விஜய்க்கு தற்போது பயம் வந்திருக்கிறதாம். அதனால், கூட்டணி விசயத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளும்படி தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.

அதன் தொடர்ச்சியாகத்தான், சமீபத்தில், நாம் தமிழர் சீமானை சந்திக்க தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் ஜான் ஆரோக்கியசாமியும் ஆதவ் அர்ஜுனாவும் மூன்று முறை முயற்சித்துள்ளனர். இரண்டு முறை அவர்களின் தொடர்பை அட்டென்ட் பண்ணாத சீமான், மூன்றாவது முறை அட்டென்ட் பண்ணினார். அப்போது, ஃபோனிலேயே சில விசயங்களைச் சொல்லி, அவர்களை சந்திக்க மறுத்துள்ளார் சீமான்.

Why does Naam Tamilar Seeman not want alliance with TVK Vijay

சீமான் விஜய் சந்திப்பு பின்னணி

சீமானை சந்திக்க விஜய் துடிப்பதற்கு சில பின்னணிகள் இருக்கிறதாம். அதாவது, திமுக கூட்டணி உடையாது; அதிமுக தலைமையில் கூட்டணி அமையாது; பிளவுப்பட்ட அதிமுக ஒன்று சேராது ; பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது; அதிமுக தனித்து விடப்படும்; அதேபோல, பாஜகவும் நாம் தமிழர் கட்சியும் தனித்துத் தான் போட்டியிடும், பாமக மட்டும் அதிமுக அல்லது பாஜகவுடன் செல்லும் என்கிற இத்தனை சூழல்கள் தமிழக அரசியலில் இருப்பதைக் கணக்கிட்டுத் தான். ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அள்ளி விடலாம் என்கிற திட்டமிடலில் தான் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு வந்தும் அதனை உதறினார் விஜய். ஆனால், தற்போது, அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைவதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து முடிந்திருக்கின்றன. இந்த கூட்டணியில் சீமானும் இணையவிருக்கிறார்.

அதிமுக கூட்டணி

அத்துடன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களும் அடுத்த 6 மாதங்களில் இணைக்கப்படவிருக்கின்றனர். தேர்தல் நெருக்கத்தில் இணைத்து கொண்டால் போதும் என்கிற செயல் திட்டமும் வகுப்பட்டு விட்டது. அதனால், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால், 15 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்படும் என விஜய்க்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இதில் அப்-செட்டானார் விஜய். இந்த சூழலில், அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைவது குறித்து கேள்விப்பட்ட விஜய், அப்படி கூட்டணி அமைந்து விட்டால் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள், நடுநிலை வாக்குகள், சிறுபான்மை ஜாதிகளின் வாக்குகள் என வலிமையான ஆதரவு அதிமுக கூட்டணிக்கு கிடைத்து விட்டால் தவெக எந்த ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது என்கிற அர்த்மேட்டிக் கால்குலேசனை விஜய்க்கு சொல்லப்பட்டுள்ளது.

இதனை உணர்ந்து அப்-செட்டான விஜய், சீமானை நம் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சியுங்கள் என்று வியூக வகுப்பாளர்களுக்கு உத்தரவிட்டாராம் விஜய். அதனடிப்படையில் சீமானை சந்திக்க அவரிடம் அப்பாயிண்மென்ட் கேட்டுள்ளனர். அப்போது, சீமானோ, நாம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். அவர் தலைமையில் நான் கூட்டணி வைக்க முடியாது இல்லையா? அதான் 25 சதவீதத்திற்கும் அதிகமாக த.வெ.க.வுக்கு ஓட் பேங்க் இருக்குன்னு சொல்றீங்களே... அப்படியானால் தனித்தே போட்டியிடுங்களேன். ஏன் என்னை இழுக்கப் பார்க்கிறீர்கள் ? என்று பழைய சம்பவங்களை மனதில் நிறுத்திக் கொண்டு, வியூக வகுப்பாளர்களை நக்கல் அடித்திருக்கிறார் சீமான் என்கின்றனர் விபரமறிந்த நாம் தமிழர் கட்சியினர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+