"கே.பி.எம்".. பெயரை சொல்லிவிட்டு.. தலையில் அடித்துக்கொண்ட ஓபிஎஸ்! உற்று பார்த்த தலைகள்! அட்டாக்
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் ஜூன் 23ம் தேதி நடந்தது என்ன என்று ஓ பன்னீர்செல்வம் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசினார்.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்தனர். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேல்முறையீடு வழக்கு மற்றும் சிவில் வழக்கு என்பதால் பெரும்பாலும் இந்த வாரமே வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

பொதுக்குழு
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் ஜூன் 23ம் தேதி நடந்தது என்ன என்று ஓ பன்னீர்செல்வம் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசினார். அவர் பேசுகையில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் அறிவிக்கிறார்கள். இது சரிப்பட்டு வராது என்று நாங்கள் வெளிநடப்பு செய்தோம். பொதுக்குழுவிற்கு நானும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்துதான் ஒப்புதல் தர வேண்டும். நாங்கள் இல்லாமல் பொதுக்குழு நடத்த முடியாது. ஆனால் எங்களை கேட்கவில்லை.. எதுவும் செய்யவில்லை.. திடீரென பொதுக்குழு நடக்கும் என்று அறிவிக்கிறார்கள்.

தலையில் அடித்துக்கொண்டார்
பொதுக்குழு நடக்கும் என்று கே.பி.எம் (கே பி முனுசாமி) அறிவிக்கிறார். எங்களை கேட்காமல் அறிவிக்கிறார் (தலையில் அடித்துக்கொள்கிறார் ஓபிஎஸ் - நிர்வாகிகள் சிரிப்பலை). இந்த பொதுக்குழு போலத்தானே அந்த பொதுக்குழு கூட வேண்டும். எப்படி என்னை கேட்காமல் பொதுக்குழுவை அறிவிக்க முடியும். இதனால்தான் நாங்கள் உடனே வெளியேறினோம். எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளிநடப்பு செய்தோம்.

அதிமுக ரவுடி
அதிமுக அலுவலகத்தில் ரவுடிகளை குவித்து வைத்தது யார்? அங்கு குத்தாட்டம் போட்டது யார்? உள்ளே எடப்பாடி ஆட்கள் ஆட்டம் போட்டுகொண்டு இருந்தனர். இது என்ன அவங்க சொத்தா? அது கட்சிக்கு உரிய சொத்து. ஜானகி அம்மா தனது சொந்த சொத்தை கழகத்திற்கு எழுதிக்கொடுத்தார். அங்கே ரவுடிகளை இறக்கி கலவரம் செய்தது யார் என்று எல்லோருக்கும் தெரியும். வீடியோ வந்துவிட்டது.

திருட்டு
நான் அங்கிருந்து திருடிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள் ( சிவி சண்முகம் மீது விமர்சனம்). நான் ஏன் என் சொந்த வீட்டில் திருட வேண்டும். நான் ஜானகிக்கு தேர்தல் நேரத்தில் தேனியில் வேலை பார்த்தேன் என்று பொய் சொல்கிறார். ஆனால் அவர்களுக்கு உண்மை தெரியாது. அப்போது ஜானகிக்காக நான் பிரச்சாரம் செய்யவே இல்லை. இது கூட தெரியாமல் இவர்கள் பேசுகிறார்கள்.

அநாகரீகம்
அவர்கள் பொதுக்குழுவில் அநாகரீக முறையில் நடந்து கொண்டனர். பொதுகுழுவில் குண்டர்களை இறக்கினர். பொதுக்குழுவில் அவர்கள் ரவுடிகளை கொண்டு வந்தனர். இதுவரை பல பொதுக்குழுவில் நான் கலந்து கொண்டேன். ஆனால் அது போல மோசமான ஒரு பொதுக்குழுவை நான் பார்த்ததே இல்லை. கட்சி செல்லும் திசை அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. கட்சியை சீரழிக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கிவிட்டனர், என்று ஓ பன்னீர்செல்வம் விமர்சனம் வைத்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications