தடுக்கி விழுந்த விஜய்.. உடனே இதை பண்ணலைன்னா.. அரசியல் எதிர்காலத்திற்கே அழுக்காகிடும்! கவனம்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் தடுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு நேர்ந்த இந்த நிகழ்வு.. ஒரு சாதாரண விஷயமாக பார்க்க கூடியது கிடையாது. விஜய் உண்மையில் சுதாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு வரவேற்பு அளிக்க ரசிகர்கள், தவெக தொண்டர்கள் முண்டியடித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், விஜய் சற்று தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக விஜய்யை சுற்றி இருந்த காவலர்கள் அவரை மீட்டு, காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். உடனடியாக விஜய் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் - தொடரும் நிகழ்வுகள்
1. விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு உடனடியாக ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
2. மலேசியாவில் கட்சி பற்றி பேச கூடாது.. அரசியல் பற்றி பேசக்கூடாது.. கொடி எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லியும் விதியை மதிக்காமல் கட்சி தொண்டர் ஒருவர் கொடியை எடுத்து வந்தது பெரிய சர்ச்சையானது. அவர் கைதும் செய்யப்பட்டார்.
3. அதோடு விழாவில் கலந்து கொண்ட மக்களின் கைகளில் கொடுக்கப்பட்ட பேண்ட் எல்இடிகளில் மஞ்சள், சிவப்பு என்று தவெக கலர் வேண்டும் என்றே காட்டப்பட்டது.
4. நீங்கள் என்ன விதி போட்டால் என்ன? நாங்கள் அதை மதிக்க மாட்டோம். நாங்கள் அதை கேட்க மாட்டோம். பாருங்க மாஸ் காட்டிட்டோம் என்று சொல்லும் விதமாக தவெக தலைகள் அல்லது விஜய் ரசிகர்கள் இதை செய்துள்ளனர்.
விஜய் கற்றுத்தர வேண்டிய ஒழுக்கம்
. இன்னொரு பக்கம் ஈரோடு கூட்டம், புதுச்சேரி கூட்டம் என்று எதுவாக இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்.. என்று கட்டுப்பாடு இருந்தும்.. அதை விஜயால் ஒரு தலைவராக தடுக்க முடியவில்லை.
6. மலேசியாவில் நடந்த நிகழ்வுகளையும் தடுக்க முடியவில்லை. இவை எல்லாம் கரூர் என்ற துர்சம்பவம் நடந்த பின் நடந்த நிகழ்வுகள்.
7. கரூருக்கு சரியான நேரத்திற்கு விஜய் வரவில்லை, அனுமதி இன்றி ரோடு ஷோ செய்தார், அங்கே இருந்த தொண்டர்கள் மின் கம்பிகளில் கூட ஏறினார்கள். இது 41 பேரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.
8. ஆனால் அதன்பின்பும் ஈரோட்டில் கம்பம் மீது தவெக நிர்வாகி ஏறும் அளவிற்குத்தான் கட்சியில் ஒழுக்கம் இருக்கிறது.
9. இப்படிப்பட்ட நிலையில்தான் கடைசியில் அந்த ஒழுக்கமற்ற ரசிகர்கள் விஜயையே சீண்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு வரவேற்பு அளிக்க ரசிகர்கள், தவெக தொண்டர்கள் முண்டியடித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், விஜய் சற்று தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10. ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போன விஜய்க்கு.. அவரின் ரசிகர்களாலேயே தடுக்கி விழும் சூழல் ஏற்பட்டுவிட்டது. விஜய் உடனே தனது ரசிகர்களுக்கு , தொண்டர்களுக்கு சிவிக் சென்ஸ் என்றால் என்ன.. ஒழுக்கம் என்றால் என்ன.. எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. ஏன் விதிகளை மதிக்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டும்.. இல்லையென்றால் இந்த தடுக்கி விழுந்த நிகழ்வு.. அவரின் அரசியலுக்கும் ஏற்படும் அபாயம் வரலாம்!
-
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications