இங்கே 10.. அங்கே 3.. கொளுத்திப்போட்ட எடப்பாடி! "அட போங்கங்க".. கூலாக டீல் செய்யும் திமுக! என்னாச்சு?
சென்னை: திமுக எம்எல்ஏக்கள் குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டி ஒன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்கள். கட்சியில் இருந்தால் எதிர்காலம் இருக்காது. இப்படி அணி அணியாக பிரிந்து கிடந்தால் இரட்டை இலை சின்னம் கூட முடங்கும்.
அதனால் இப்போதே பாதுகாப்பான கப்பலுக்கு தாவி விடுவோம் என்று மூழ்கும் டைட்டானிக்கில் இருந்து லைப் போட்டிற்கு தாவும் பயணிகள் போல முக்கிய அதிமுக தலைகள் அணி மாற தயாராக இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் உள்ள 3 எம்எல்ஏக்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க போவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வட்டாரத்தில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றார். இந்த நிகழ்வில் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இந்த நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளனர். பாஜகவை சேர்ந்த மைதிலி வினோ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்ளிட்டோர் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திமுக பக்கம் செல்ல போவதாக செய்திகள் வந்தன.

எம்பி
எம்பி செந்தில் குமார் கூட இது தொடர்பாக இரட்டை இலை எமோஜி வைத்து குறிப்பாக ட்விட் ஒன்றை போட்டு இருந்தார். அதன்படி 3 எம்எல்ஏக்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. கோவையை சேர்ந்த 10 அதிமுக எம்எல்ஏக்களில் 3 பேர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதிகாரபூர்வமாக கட்சி தாவினால் இவர்களின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். அதனால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று செய்திகள் வந்தன.

எடப்பாடி ஆலோசனை
இந்த நிலையில்தான் அதிமுகவில் அணி தாவ போகும் அந்த 3 எம்எல்ஏக்கள் யார் யார் என்று எடப்பாடி விசாரித்ததாக கூறப்படுகிறது. கோவையில் மொத்தம் 9 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் திமுகவுடன் நெருக்கமாக உள்ள 3 பேர் யார் யார் என்று விசாரணைகள் செய்து வருகிறார். அதிமுகவில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது என்பது எடப்பாடிக்கு தெரியும். இதை தடுக்கவே அவர் தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் அவர் எதிர்பார்க்காத வகையில் திமுக உள்ளே புகுந்து எம்எல்ஏக்களை தூக்க முயற்சிப்பது எடப்பாடி தரப்பிற்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காட்டம்
இந்த நிலையில்தான் இது பற்றிய கேள்விக்கு இன்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்தார். எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், திமுகவின் எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மொத்தம் 10 திராவிட முன்னேற்ற கழக எம்எல் ஏக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலரிடமும், அறிவாலயம் தரப்பிடமும் இது பற்றி விசாரித்தோம். எடப்பாடி இப்படி சொல்கிறாரே என்று விசாரித்தோம்.

3 பேர் யார்?
ஆனால் அவர்களோ.. முன்பு கூறிய அதே 3 எம்எல்ஏக்கள் விஷயத்தை திருப்பி கூறினார்கள். அதிமுகவில் கோவையில் உள்ள 3 எம்எல்ஏக்கள் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள். இது எடப்பாடிக்கும் தெரியும். அந்த விரக்தியில் அவர் 10 எம்எல்ஏக்கள் திமுகவில் இருந்து அதிமுக பக்கம் போக போவதாக சொல்கிறார்கள். அதிமுகவிலேயே பல பிரச்சனைகள் இருக்கிறது.

10 எம்எல்ஏக்கள்
கட்சிக்கு தலைவர் யார் என்றே தெரியவில்லை. அப்படி இருக்கும் போது திமுக எம்எல்ஏக்கள் எப்படி அதிமுக பக்கம் செல்வார்கள். அவருக்கு விரக்தி. அதில் திமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார், கூலாக கூறுகிறார்கள் திமுகவினர். எது எப்படி இருந்தாலும் தேசிய அளவில் பல மாநில அரசுகளில் எம்எல்ஏக்கள் அணி மாறுவதால் தென்னிந்தியாவிலும் இந்த அச்சம் தொற்றிக்கொண்டு உள்ளது. ஆனால் அதற்க்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று திமுக தரப்பும் நம்பிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications