இதுக்குதான் அனுபவம் தேவை Mr. விஜய்.. மீட்டிங்கில் அசம்பாவிதம், பிறகு அடிதடி! படுத்தி எடுக்கும் தவெக
சென்னை: இன்று மதியம் தான் சேலத்தில் நடந்த பிரச்சாரத்தில் அனுபவம் எல்லாம் தேவையில்லை என்ற ரேஞ்சுக்கு விஜய் டையலாக் பேசியிருந்தார். அவர் அப்படிப் பேசி சில மணி நேரம் கூட ஆகாத நிலையில், மாலையிலேயே தவெகவினர் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். சேலத்தில் உயிரிழந்த சூரஜ் உடல் வைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை முன்பு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி கணக்குகளுக்கு இணையாகப் பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது. எல்லாக் கட்சிகளுமே தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் தீவிரப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

விஜய்
தமிழக அரசியல் களத்தில் புதிதாக இறங்கியுள்ள விஜய்யும் தனது பங்கிற்குப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இப்போது தான் ஆங்காங்கே பிரச்சாரத்தை ஆரம்பித்து விஜய் நடத்தி வருகிறார். ஆனால், தவெகவினர் இன்னும் அரசியல் கட்சியாக மாறவில்லை.. இன்னும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள் என்றும் இதனால் சுய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் பரவலாக இருந்து கொண்டே இருக்கிறது.
அதேபோல விஜய் தரப்பு மீது அனுபவம் இல்லை என்ற விமர்சனமும் இருந்து கொண்டே இருக்கிறது. கட்சியைக் கூட முழுமையாக இரண்டு ஆண்டுகள் நடத்தாதவர் எப்படி ஆட்சி அதிகாரத்தைச் சிறப்பாக நடத்த முடியும் என்ற கேள்விகள் இல்லாமல் இல்லை. இந்தச் சூழலில் தான் இன்று சேலத்தில் பேசிய விஜய் அனுபவம் எல்லாம் தேவையில்லை என்பது போலப் பேசியிருந்தார்.
அனுபவம்
அதாவது தவெகவினருக்கு அனுபவம் இல்லை எனச் சிலர் குற்றஞ்சாட்டுவதாகச் சொன்ன விஜய். மற்ற கட்சிகளுக்குக் கொள்ளை அடிப்பதில் மட்டுமே அனுபவம் இருப்பதாகவும் தங்களுக்கு அதில் அனுபவம் இல்லை என்பது உண்மை தான் என்றும் சொல்லியிருந்தார். மேலும், மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் போதும் சூப்பரான நல்லாட்சி கொடுக்கலாம் என்றும் அனுபவம் தேவையில்லை என்ற ரேஞ்சுக்கும் அவர் பேசியிருந்தார்.
விஜய் இப்படிப் பேசி சில மணி நேரம் கூட ஆகாத நிலையில், மறுபுறம் தவெகவினர் ஏன் அனுபவம் முக்கியம் என்பதை நிரூபித்துவிட்டார்கள். இன்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக சூரஜ் என்பவர் உயிரிழந்திருந்தார். அவரது உடல் தனியார் மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டு இருந்தது. அங்குச் செய்திகளைச் சேர்க்கச் செய்தியாளர்கள் சென்றிருந்தனர்.
தாக்குதல்
அப்போது தவெக மாவட்டச் செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்றபோது, செய்தியாளர்கள் மீது மோதுவது போலக் காரை தவெக நிர்வாகி இயக்கியுள்ளார். அது தொடர்பாகக் கேட்டபோது, தவெக நிர்வாகி ஒருவர் செய்தியாளரைத் தாக்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. தங்களைத் தாக்க முயன்ற தவெக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் செய்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நிர்வாகி மன்னிப்பு கேட்கக் காரை விட்டு வெளியே வரவே இல்லை.
மன்னிப்பு கேட்கும் வரை காரை விட மாட்டோம் எனச் செய்தியாளர்கள் நிர்வாகி அமர்ந்திருந்த காரை மறுத்துள்ளன. அப்போது தவெக நிர்வாகி ஒருவர் டிவி சேனல் கார் ஒன்றின் மீது ஏறி அத்துமீறியுள்ளனர். மேலும், ஒரு கட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்ட நிலையில், இதில் ஒருவரின் மண்டையும் உடைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மிஸ்டர் விஜய்
தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சி நடத்தும் கூட்டங்களிலும் சுயகட்டுப்பாடு இருக்கும். ஆனால், இன்று கூட்டம் முடிந்தவுடன் முறையான வழியில் வெளியேறாமல் தடுப்பைத் தாண்டிக் குதித்து வெளியேறியுள்ளனர் தவெகவினர். அதேபோல தங்கள் பணிக்காகச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்! இந்தச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி இதுக்கு தான் அனுபவம் தேவை மிஸ்டர் விஜய் என்று நெட்டின்சன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications