சாப்பாடு நல்லா கொடுக்கனும்னு எப்படி தோணுச்சு.. சாப்பிட கூட விடல.. வைரலாகும் விஜயகாந்த் வீடியோ
சென்னை: நான் ஏன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நல்ல உணவு கொடுக்க முடிவு செய்தேன் என்று விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.15 மணிக்கு காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளார் கேப்டன் விஜயகாந்த். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு அழகர் சாமி - ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக விஜயகாந்த் பிறந்தார். சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் அதிகம். எனினும் அவர் அவ்வளவு எளிதாக சினிவாவில் வந்துவிடவில்லை. கருப்பு நிறம் என்பதால் பல அவமானங்களை அவர் சந்தித்துள்ளார்.
இப்படி பல்வேறு அவமானங்களை ஆரம்பத்தில் சந்தித்த விஜயகாந்த் இப்போது மக்கள் போற்றும் உன்னத தலைவர் என்று பெயர் எடுக்கும் வகையில் உயர்ந்துள்ளார். இதேபோல் எப்போதும் எல்லாருக்கும் சாப்பாடு வழங்குவார் என்ற பெயர் விஜயகாந்த்துக்கு உண்டு. அப்படி எல்லாருக்கும் சாப்பாடு நல்லா கொடுக்கனும் என்ற யோசனை எப்படி வந்தது என்று முன்பு ஒரு வீடியோவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் விஜயகாந்த் பேசியிருப்பதாவது:- கருப்பா இருக்கிற நீ எல்லாம் ஏன் நடிக்க வருகிறாய்... ஏற்கனவே ஒருத்தர் இருக்கார் என எல்லாரும் பேசுவார்கள். பல ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும் ஆளாகி ஆளாகி என்னுடைய மனது கல்லாக மாறி இறுகிப்போனது. பல அசிங்ககளை தாங்கி கொண்டேன். பல பிரச்சினைகளை தாங்கி.. தாங்கி பலகிகிட்டேன்.
அப்போது ஒரு நாள் சூட்டிங்கில் நான் சாப்பாட்டில் கை வைக்கும் போது கதாநாயகி வந்துட்டாங்க.. வாங்க வாங்க என கூப்பிடுவாங்க.. சாப்பிட கூட விடல.. என்னடா இது சாப்பிட கூட விடமாட்டுக்காங்கன்னு நினைக்கும் போது தான் ஒன்னு தோனுச்சு.. எல்லாருக்கும் நல்லா சாப்பிட வெண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது ராவுத்தர்.. அப்போ பொட்டனம் சாப்பாடு தான் போட்டுக்கொண்டிருந்தனர்.
நான் தான் இலையில் சோறு போட வேண்டும் என்று நினைத்தது நான். இதனை கொண்டு வந்தது நான் தான் என்று சொல்வதில், கவுரவம் என்று நினைத்தாலும் சரி.. திமிறு என்று நினைத்தாலும் சரி.. நான் என்ன சாப்பிடுறேனோ அதை தான் எல்லாரும் சாப்பிடனும். நான் கூல்டிரிங்க்ஸ் சாப்பிட்டாலும் அவங்களும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடனும்.. நான் இளநீர் சாப்பிட்டால் அவங்களுக்கும் இளநீர்.. மட்டன் சாப்பிட்டால் அவங்களுக்கும் மட்டன்.. இப்படி கொண்டு வந்தது தான் ரைஸ்.
நான் எதையோ ஒன்றை நினைத்து அதில் வெற்றி பெற வேண்டும் என்று போய்க்கொண்டிருப்போம். இது எல்லாம் சின்ன விஷயம்.. ரோட்டில் ஒருத்தர் பக்கத்துவீட்டுக்காரன் எதாவது பேசிவிட்டான் என்பதை நினைத்து வருத்தப்பட்டால் நாம எதை நோக்கி செயல்படுகிறோமோ அது செயல்படாம போகிடும். அதே செயலில் நாம் வெற்றி பெற்றுவிட்டால், நாங்க அன்றைக்கே சொன்னோம் என்று பேச்சை மாத்திடுவாங்க.. அதனால இப்போ பேசுறத பற்றி கவலைப்பட வேண்டாம். என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications