குன்றத்தூர் அபிராமி முதல் கடலூர் சாந்தி தேவி வரை.. இதயம் தாண்டும் கள்ளக்காதலால் வேதனைதான் மிச்சம்!
சென்னை: காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். அது போல் இதயத்தை தாண்டி செல்லும் கள்ளக்காதலால் எந்த பயனும் இல்லாமல் உயிரிழப்புகளோ பிரிவுகளோ ஏற்படும் நிலை உள்ளது.
காதல் என்ற புனிதமான சொல்லுக்கு ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், படித்தவன் , படிக்காதவன், வேலையில் இருப்பவன், வேலையில் இல்லாதவன், வயது வித்தியாசம் போன்ற பாகுபாடுகள் எல்லாம் தெரியாது.
இதனால்தான் பெரியவர்கள் காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள். மேலும் கண்மூடித்தனமான காதலால் ஆணோ பெண்ணோ தன் பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் நிலை ஏற்படுகிறது. இந்த அவமானங்களால் பல பெற்றோர் தற்கொலை செய்வதும் சம்பந்தப்பட்ட காதலன், காதலியை கொலை செய்வது, மிரட்டி தாக்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.

குழந்தைகள் நலன்
வெகு சில பெற்றோர்களே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பிடித்தவர்களையே மணமுடித்து வைக்கிறார்கள். நம் தலைவிதி சரியாக இருந்தால் வாழ்வும் சரியாக இருக்கிறது, இல்லாவிட்டால் வரதட்சிணை கொடுமை, குடி, பொறுப்பில்லாதது உள்ளிட்ட காரணங்களால் பிரிவுகள் ஏற்படுவது தனிக் கதையாகும்.

பெற்றோரால் நிச்சயம்
காதல் திருமணத்திலும் சரி பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணத்திலும் சரி ஒரு சில கேஸ்களில் சிலர் சில காலம் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு தடம்மாறி செல்கிறார்கள். ஒன்று கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல், மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ளக்காதல் என்பதால் இறுதியில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதை யாரும் அறிந்திருப்பதாக தெரியவில்லை.

மனைவி
வெறும் அற்ப விஷயங்களுக்காக கட்டிய மனைவிக்கோ கட்டிய கணவருக்கோ துரோகம் செய்யும் மனப்பான்மை இன்று பெரும்பாலானோருக்கு வந்துவிட்டது. இதில் பெண்கள் கள்ளக்காதலால் ஆண்களை காட்டிலும் மிக கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு ஆணுக்கு கள்ளக்காதல் என்றால் மனைவியையும் குழந்தைகளையும் நட்டாற்றில் விட்டுவிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்.

கள்ளக்காதலால் ஏற்படும் விளைவுகள்
ஆனால் ஒரு பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டால் இவர்களது குழந்தைகளுக்கு இரு விதங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரமடையும் கணவர், மனைவியையும் கள்ளக்காதலனையும் வெட்டிவிட்டு சிறைக்கு செல்வது, இதனால் குழந்தைகள் ஆதரவற்றுக் கிடப்பது. இன்னொரு விஷயத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கணவரை கொல்ல ஐடியா கொடுத்து கடைசியில் கொலைக்கு மாஸ்டர் பிளான் போடுவது. இதனால் மனைவி சிறைக்கு செல்ல நேரிட்டு குழந்தைகள் ஆதரவற்று கிடக்கின்றன.

வெறுப்பு
இழப்பையும் சிறை வாழ்க்கையையும் கருத்தில் கொள்ளும் சிலர் தன்னை கணவனே வேண்டாம் என சொல்லும் அளவுக்கு வெறுப்படைய செய்துவிட்டால் நம் கள்ளக்காதலுக்கு இடையூறு இல்லை என திட்டம் போட்டு குழந்தைகளை டார்ச்சர் செய்கிறார்கள். இதற்கு குன்றத்தூர் அபிராமி முதல் இன்று கடலூர் சாந்தி தேவி வரை உதாரணங்கள் இருக்கின்றன. இவர்களில் லேட்டஸ்டானவர்கள் செஞ்சி துளசியும் கடலூர் சாந்தி தேவியும்.

கள்ளக்காதல்
செஞ்சி துளசி கள்ளக்காதலால் அவர் மகிழ்ச்சியாக இருக்க குழந்தையை கடுமையாக ரத்தம் சொட்டும் அளவுக்கு தாக்கி வீடியோ எடுத்து ரசித்துள்ளார். தற்போது சிறையில் இருக்கிறார். அது போல் கடலூர் சாந்தி தேவியும் கள்ளக்காதலால் 12 வயது மகனை உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமைப்படுத்தி இன்று கைதாகியுள்ளார். குன்றத்தூர் அபிராமி கள்ளக்காதலுக்காக தன் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றவர் என்பதை அனைவரும் அறிவோம்.

தாள முடியாத வலி
10 மாதம் சுமந்து யாராலும் தாள முடியாத வலியை பொறுத்துக் கொண்டு அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கும் போது குழந்தை அழும் சப்தத்தை கேட்டால் பிரசவத்திற்கு பட்ட வலி மறந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு குழந்தையை கிட்டதட்ட மறு பிறவி எடுத்து பெற்றுக் கொள்ளும் போது எப்படி அக்குழந்தைகளை கொல்லவோ துன்புறுத்தவோ மனம் வருகிறது என தெரியவில்லை.

வர்ணனையில் ஈர்ப்பு
குழந்தைக்கு மிஞ்சி இவர்களுக்கு அப்படி என்ன கள்ளக்காதலன் மீது மோகம் என கேட்டால் எல்லாம் வார்த்தை ஜாலம்தான். தேவையில்லாமல் கணவரையும் கள்ளக்காதலனையும் ஒப்பிட்டு பார்த்து அதில் கள்ளக்காதலன்தான் சரியானவர் என கண்மூடித்தனமாக நம்புவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. உளவியல் நிபுணர்கள் கூறுவது என்னவெனில் தன்னை கணவனை காட்டிலும் ஒரு ஆண் வர்ணிக்கும்போது அதனால் அந்த பெண் ஈர்க்கப்படுகிறாள் என்கிறார்கள். மற்றொன்று அவருடனான "உறவை" கைவிட மனமில்லாமல் இது போன்ற கொடூரங்களை செய்ய துணிகின்றன. இதனால்தான் அன்று சாந்த ஸ்வரூபிணியாக வலியையும் பொறுத்துக் கொண்டு குழந்தை பெற்ற இவர்களை போன்ற சில பெண்கள் பத்ரகாளியாக மாறி குழந்தைகளின் வாழ்வை துவம்சம் செய்கிறார்கள். இவையெல்லாம் மாற கணவனும் மனைவியும் மனம் விட்டு பேச வேண்டும். இருவரும் பரஸ்பரம் தங்கள் எதிர்பார்ப்புகளை தங்கள் துணையுடனேயே பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தையை மிஞ்சி வேறு எதுவும் தேவையில்லை என எண்ணும் வைராக்கிய குணமும் தேவை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications