"ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயலலிதா".. டெல்லி வரை போன சசிகலா "மர்மம்".. திரும்பிய வடக்கு.. போச்சே!
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து இணையத்தில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை இந்த ஆணைய அறிக்கை வெளியாகி இருந்தாலும் தற்போது வரை அதன் மீதான விவாதம் நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 6 வருடமாகவே கடுமையான வதந்திகள், சர்ச்சைகள் நிலவி வந்தன. ஜெயலலிதா எப்படி இறந்தார், அவருக்கு என்ன ஆனது? அப்போலோ மருத்துவமனையில் என்ன ஆனது என்று பல்வேறு கேள்விகள், விவாதங்கள் நடந்து வந்தன.
இந்த கேள்விகள் பலவற்றிற்கு தற்போது ஆறுமுகசாமி ஆணையம் மூலம் பதில் கிடைத்து உள்ளது. சில கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் ஆறுமுகசாமி ஆணையம் புதிதாக பல கேள்விகளை உருவாக்கி உள்ளது.

சந்தேகம்
சந்தேகங்களை முடிவிற்கு கொண்டு வருவதை விட சந்தேகங்களை அதிகப்படுத்தி சென்று உள்ளது இந்த அறிக்கை. அதே சமயம் சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் வைத்து உள்ளது. ஜெயலலிதா மயக்கம் அடைந்த உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் தவறே இல்லை. ஆனால் அதன்பின் நடந்தது எல்லாம் மர்மமாக இருந்துள்ளது.

மர்மம்
ஜெயலலிதா மருத்துவமனை சென்ற பின் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அங்கே அவருக்கு என்ன நடந்தது என்பதில் பல மர்மங்கள் இருக்கின்றன என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரண வழக்கில் சசிகலாவை குற்றவாளியாக பார்க்க வேண்டும் என்றும் இந்த ஆணைய அறிக்கை தெரிவித்து உள்ளது. அதோடு முக்கியமாக ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ கொடுக்க முயன்ற போது சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதை தடுத்து நிறுத்தினர் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

டிரெண்ட்
இந்த நிலையில்தான் தற்போது ட்விட்டரில் திடீரென #JayaDeathExposed என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை இந்த ஆணைய அறிக்கை வெளியாகி இருந்தாலும் தற்போது வரை அதன் மீதான விவாதம் நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது. திடீரென காலையில் இருந்து இந்த டேக்கின் கீழ் பலர் போஸ்ட் செய்து வருகின்றனர். ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளியாகிவிட்டதாக அவர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளனர்.

குற்றச்சாட்டு
சசிகலா மீது நேரடியாக இந்த டிரெண்டில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. சசிகலாதான் அனைத்து தவறுகளையும் செய்தார் என்பது போல இதில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. சசிகலா - ஜெயலலிதா இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இவர்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர். முக்கியமாக ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். ஒரு மாநில முதலமைச்சராக இருந்தவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுடைய நிலை என்ன?

விமர்சனம்
439வது பக்கத்தில் இருக்கும் முக்கியமான விவரம் ஒன்று மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அப்போதைய தலைமைச் செயலாளர், 4.12.2016 அன்று தகவலின் பேரில், மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மறைந்த முதல்வருக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகவும், மாரடைப்பு முடிவு பார்த்தபோது, அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே அவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். வார்டில் பார்த்த போது மறைந்த முதல்வருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டு அவர் பெரும் அதிர்ச்சியுற்றதாகக் கூறினார்.

அதிர்ச்சி
இது ஏன் வார்டில் செய்யப்படுகிறது என்று மருத்துவர்களிடம் கேட்டு, அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறி உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த வரிகளை நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளனர். இதனால் #JayaDeathExposed டேக் டிரெண்டாகி வருகிறது. முக்கியமாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலத்தவர்கள் பலர் இதில் போஸ்ட் செய்து வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் பலர் சசிகலாவை குற்றஞ்சாட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இத்தனை நாட்களால் கழித்து இன்று அந்த டிரெண்ட் ஆவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications