இது அடிப்படை விதியாச்சே? அமித் ஷா எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும்? அண்ணாமலை குழப்புறாரே!
சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் உள்ளூர் திமுகவினரின் உத்தரவின் பேரில் நடைபெற்று இருப்பதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.
குழப்பம்: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் இது மாநில விவகாரம். அப்படி எல்லாம் அமித் ஷா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது .
சிபிஐயின் செயல்பாடு / சட்டத்தின் படி பார்த்தால்
1. சிபிஐ MHA கீழ் கட்டுப்பாட்டில் இல்லை, மாறாக DoPT, PMO கீழ் உள்ளது.
2. யூனியன் பிரதேசங்களின் பிராந்திய அதிகார வரம்பைத் தவிர வேறு எந்த வழக்கிலும் சிபிஐ விசாரணைக்கு MHA உத்தரவிட முடியாது.
3. கள்ளக்குறிச்சி சோகம் என்பது சிபிஐயின் கீழ் செல்ல மாநில அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே நடக்கும்.
மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் மட்டுமே சிபிஐ வேறு மாநிலங்களில் விசாரணை செய்யலாம். ஒரு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்காவிட்டால் அல்லது நீதிமன்றம் உத்தரவிடாமல், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியாது என்பதே சட்ட விதி. ஆனால் அண்ணாமலை இந்த அடிப்படை விதி தெரியாமல் அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை கேட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயம் குறித்து கேள்விப்பட்டதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். முதல் ஆளாக இந்த விவகாரத்தில் லீகல் டீமை அனுப்பி எடப்பாடி வழக்கு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.
அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications